விருச்சிகம் கார்த்திகை மாத ராசி பலன் 2022!

Published:

வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் மாதமாக இருக்கும், நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் மீண்டும் இணைவீர்கள். தொழில்ரீதியாக சுய முயற்சியால் முன்னேற்றம் அடைவீர்கள்.

புதன் பகவான் இராசியில் இருந்து, உங்களுக்குச் சாதகமான பலன்களைக் கொடுப்பார். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் எந்தவொரு காரியத்திலும் தடை ஏற்படாது.

வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை முன் கோபத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப ஸ்தானம் வலுப்பெற்று இருக்கும், பேசும் பேச்சில் தெளிவு இருந்தாலே பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

6 ஆம் இடத்து அதிபதியான செவ்வாய் பகவான் 7 ஆம் இடத்தில் இருப்பதால் உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறும். தந்தைரீதியாக பூர்விகச் சொத்துகள் வந்து சேரும்.

பூமி சார்ந்த சேமிப்பில் ஈடுபடுவீர்கள். குழந்தைகள் கல்விரீதியாக மேம்பட்டுக் காணப்படுவார்கள். சுப செலவுகள் வீட்டில் ஏற்படும், திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் அமையப் பெறும்.

குழந்தைப் பேறுக்காக காத்திருப்போருக்கு நல்ல செய்தி தேடி வரும். புதிதாக வேலை தேடுவோருக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment