வீடு கட்டும் யோகம் வாய்க்க இந்த பரிகாரத்தினை செய்ங்க!!

Published:

813ab28c85167624a58da0191c4ed4e6

எல்லாருக்குமே சொந்த வீடு கட்டனும்ன்னு ஆசை இருக்கும். என்னதான் சம்பளத்தை மிச்சம் பிடிச்சு, வாயை கட்டி, வயித்தை கட்டி சேமிச்சாலும் வீடு கட்ட காலதாமதமாகும். இப்படி வீடு கட்டும் யோகம் சீக்கிரம் வாய்க்க கீழ்க்காணும் எளிய பரிகாரத்தை செய்ங்க.

தேவையான பொருட்கள். தாமரை மணி மாலை 1, ஆறுமுகம் கொண்ட ருத்ராட்சம் 6, பச்சை கற்பூரம் சிறிதளவு, நன்னாரி வேர் பொடி சிறிதளவு. தாமரை மணி மாலை எந்த எண்ணிக்கையிலும் இருக்கலாம், அதில் தவறில்லை. ஒரு பெரிய தட்டில் நன்னாரி வேர் பொடியை பரப்பி வைக்கவேண்டும். தாமரைமணி மாலையை வட்டமாக நன்னாரிவேர் பொடியில் வைக்கவும். மணி மாலைக்கு நடுவே பச்சை கற்பூரத்தை கொட்டி, அதில் ஆறு ருத்ராட்சத்தை வட்டமாக வைத்துவிட்டால் போதும். இந்த தட்டை உங்களது வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் பத்திரமாக வைத்து விடுங்கள். இந்தப் பொருட்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து உங்கள் வீட்டில் ஒரு நல்ல ஈர்ப்பு தன்மையை உண்டாக்கும். வீடு கட்ட வேண்டும் என்ற உங்களது எண்ணமும் இந்த  பரிகாரமும் சேர்ந்து, நிலத்தை வாங்கி வீடு கட்டுவதற்கான வழியை கூடிய விரைவில் நிச்சயமாக உங்களுக்கு காட்டிவிடும்.

af55221898c69afe5667d916a19c4468

இந்த பரிகாரத்தோடு சேர்த்து வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், சுவாமி படத்தின்முன் 2 வெற்றிலை, 2 பாக்கு, வைத்து,அதன்மேல் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து, தீபமேற்றி வீடு கட்ட வேண்டும் என பிரார்த்தனை செய்து வரவேண்டும். வெற்றிலையை வாட விடக்கூடாது அதுதான் முக்கியம். முடிந்தால் சாப்பிட்டு விடலாம். இல்லையென்றால் பசுமாட்டிற்கு கொடுத்துவிடலாம். அல்லது கிணறு அல்லது ஓடும் நீரில் விட்டுவிடலாம். ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் வாரம்தோறும் சேமித்து வாருங்கள். நிச்சயமாக 108 வாரத்திற்குள் நல்ல செய்தி வந்து சேரும் என்பது உறுதி. 108 நாணயங்களை தர்ம காரியத்திற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,

நம்பிக்கையோடு செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment