துலாம் மார்ச் மாத ராசி பலன் 2023!

Published:

துலாம் ராசியினைப் பொறுத்தவரை சுக்கிரன் உச்சமடைந்து 6 ஆம் இடத்தில் உள்ளார். மார்ச் மாதத்தின் பிற்பாதியில் செவ்வாயின் நகர்வு மற்றும் சுக்கிரனின் பார்வையால் வேலைவாய்ப்புரீதியாக சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.

வேலை செய்யும் இடங்களில் கடுமையான எதிர்ப்பு நிலவும், வேலைப் பளு அதிகமாக இருந்தாலும் பெரிதளவில் பாராட்டு இருக்காது. பணவரவு சிறப்பாக இருந்தாலும் செலவு அதை மிஞ்சியதாகவே இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை செவ்வாயின் நகர்வுக்குப் பின் தட்டிப் போன வரன்கள் மீண்டும் அமையும் வாய்ப்புண்டு. குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான உறவில் தவறான புரிதல் இருக்கும். மேலும் வாழ்க்கையின் மீது வெறுமை தோன்றும்.

செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருப்பதால் தேவையில்லாத விஷயங்களை கணவன்- மனைவி பேசி பெரும் சண்டைக்கு வித்திடுவர். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் சிறு சிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் மார்ச் இரண்டாம் பாதியில் உடல் குறைபாடுகள் அனைத்தும் சரியாகிவிடும்.

மாணவர்களைப் பொறுத்தவரை மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை நடக்கும் என நினைத்த விஷயங்கள் நடக்காமல் போனதால், நீங்கள் மனம் நொந்து காணப்படுவீர்கள்.

மேலும் உங்களுக்காக...