துலாம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

Published:

சுக்கிரன்- சனி எனக் கோள்கள் இணைந்து இடப் பெயர்ச்சி அடைகின்றன. இதுவரை எடுக்கும் முயற்சிகளில் தடைகளை மட்டுமே பார்த்து சோர்ந்து போய் இருப்பீர்கள். தற்போது இவற்றில் இருந்து மீண்டு புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நேர்மறையான பலன்கள் கிடைக்கப் பெறும். 1 ஆம் இடத்தில் கேது, 8 ஆம் இடத்தில் செவ்வாய், 6 ஆம் இடத்தில் குரு பகவான், 7 ஆம் இடத்தில் ராகு என கோள்களின் இட அமைவு உள்ளது.

தயக்கத்தினை உடைத்து தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் உங்கள் முயற்சியின்போது குறுக்கிடும் சிறு சிறு தடைகளை தகர்க்கலாம். திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன்கள் தட்டிப் போகும். கைகூடி வரும் வரன்கள் செவ்வாய் பகவானின் இடையூறால் சிக்கல்களில் முடியும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே வாக்குவாதங்கள் போன்றவற்றினைத் தவிர்த்தல் நல்லது. மாணவர்களைப் பொறுத்தவரை சிறப்புத் திறமைகளை வளர்ப்பீர்கள்.

சுக்கிரன்- சனி பகவானின் இடப் பெயர்ச்சியால் நீங்கள் விரும்பியதைச் செய்து முடிப்பீர்கள். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.

வண்டி, வாகனங்கள் சார்ந்த மாற்றங்களைச் செய்வீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அவ நம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம்ரீதியாக கவனம் செலுத்துதல் வேண்டும். சனிப் பெயர்ச்சியால் மன ஆறுதல் கிடைக்கப் பெறும்.

மேலும் உங்களுக்காக...