துலாம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

Published:

துலாம் ராசியினைப் பொறுத்தவரை ஏப்ரல் மாதத்தில் குரு பகவானின் பார்வை துலாம் ராசியின் மீது விழுகின்றது. சூர்ய பகவான் உச்சம் அடைகிறார், சுக்கிரன் 8 ஆம் இடத்தில் ஆட்சி பலத்துடன் உள்ளார். புதன் 7 ஆம் இடத்தில் உள்ளார்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை மாற்றங்களை எதிர்பார்த்து இருப்போருக்கு 70 சதவீதம் சாதகமான மாதமாக இருக்கும். குருவின் பார்வையால் புது வாய்ப்புகள் உருவாகும். இதுவரை நீங்கள் வாய்ப்பினைத் தேடிப் போன நிலையில் இனி வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை குருவின் பார்வை படுவதால் தடங்கல்கள் ஏற்பட்டு பின் திருமண முயற்சிகள் கைகூடும். தொழில்ரீதியாக சிறு சிறு தடங்கல்கள் இருக்கும்; பெரிய அளவிலான மாற்றம் எதையும் செய்யாமல் இருத்தல் நல்லது.

குழப்பம் ஏற்பட்டு மனம் தெளிவு பெறும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை ஒரே மாதிரியாக இல்லாமல் மகிழ்ச்சி, துன்பம், மன உளைச்சல் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை சூர்யன்- குருவின் பார்வை சிறப்பாக உள்ளது, உயர் கல்வி ரீதியாக வெளியூர் மற்றும் வெளிநாட்டில் படிப்போருக்கான வாய்ப்புகள் அமையும்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை சுகங்கள் உங்களை எதிர்நோக்கி வரும், ஆனால் உறவினர்களின் குறுக்கீட்டால் பல வித பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்டத்தைக் காட்டிலும் உங்களின் அனுபவங்கள்தான் உங்களை வழிநடத்தும். உடல் ஆரோக்கியம்ரீதியாக விரயச் செலவுகள் ஏற்படும்.

மேலும் உங்களுக்காக...