கையில் உள்ள சூரிய ரேகை கூறும் பலன்கள்…..

By Staff

Published:

d5d1a90dff4ec5cd2730ecbe8edb76db

நம் கையில் உள்ள ஒவ்வொரு ரேகையும், நமக்கான பலனை கூறுகின்றது என நாம் அனைவருக்கும் தெரியும். இதற்கு முன் பல ரேகைகளைப் பற்றி பார்த்தோம். தற்போது சூரிய ரேகையைப் பற்றி பார்ப்போமா….

நம் கையில் சூரிய ரேகையை எப்படி அடையாளம் காண்பது என்றால், மோதிர விரலுக்கு கீழே ஒரு சிறியதாக கோடு போன்று இருக்கும். சூரிய ரேகை என்பதிலேயே ஒரு அர்த்தம் உள்ளது. இவ்வுலகில் சூரியன் இல்லையென்றால் என்ன நடக்கும்.

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் சூரியன் தான் முழு முதற் காரணம். இந்த சூரிய ரேகை ஒருவரின் அறிவுத் திறனையும், ஆற்றலையும் கூறக்கூடியது. இந்த ரேகை சந்திர மேட்டிலிருந்து ஆரம்பித்தால் மிகவும் நல்லது. அதாவது இந்த ரேகை இப்படி அமைந்தால் ஒருவருடைய வெற்றிக்கும் புகழுக்கும் மற்றவர்கள் உறுதுணையாக இருப்பார்களாம்.

அதாவது அவர்கள் முன்னேறுவதற்காக சொந்த பந்தமும், நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். மற்ற ரேகைகளைப் போல இந்த ரேகையும் மெல்லியதாகவும், லேசானதாகவும் மற்றும் தெளிவாகவும் இருப்பது நமக்கு மிக மிக நல்லது.

இந்த ரேகை நன்றாக தெரிந்து சூரிய மேடும், குரு மேடும் உயர்ந்து காணப்பட்டால் ஒருவர் அறிவியல் மேதை ஆகுவதற்கு கூட வாய்ப்பு உள்ளதாம். மேலும் சூரிய ரேகை எந்த பிளவும் ஏற்படாமல் ஒரே சீராக  இருப்பது நமக்கு நன்மையை ஏற்படுத்தும்.

Leave a Comment