சிம்மம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

Published:

சிம்ம ராசியினைப் பொறுத்தவரை திருமண காரியங்கள்ரீதியாக எதிர்பார்த்த வரன்கள் கைகூடும். தொழில்ரீதியாக ஓரளவு பெயரும், புகழும் இருக்கும் காலமாக இருக்கும். வியாபாரம் அமோகமாக இருக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறும்.

வேலைவாய்ப்புரீதியாக பெரிய அளவில் சம்பள உயர்வு இருக்காது; ஆனால் இருக்கும் வேலையினைவிட்டு புது வேலைக்கு முயற்சிக்காமல் இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது.

வெளியூர், வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு நினைத்தது கைகூடும் காலமாக இருக்கும். பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகள் குறையும், உடன் பிறப்புகளுடனான உறவுகள் மேம்படும். பிரிந்த உடன் பிறப்புகள் மீண்டும் சேர்வர்.

காதலர்கள் வீட்டில் சொல்லும்போது பெரிய அளவில் எதிர்ப்புகள் இருக்கும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான உறவில் மனக் கசப்புகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

தந்தையின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் அதிகரிக்கும், வீண் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போர் குடும்பத்துடன் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வருதல் வேண்டும்.

மேலும் உங்களுக்காக...