சிம்மம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!

Published:

ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் சிம்ம ராசிக்கு 9 ஆம் இடத்தில் பிரவேசிக்க உள்ளார் குரு பகவான். சிம்ம ராசியினைப் பொறுத்தவரை குரு பகவான் மிகப் பெரும் ஏற்றங்களைக் கொடுக்கவுள்ளார்.

மகிழ்ச்சி நிறைந்த மாற்றங்களையும், ஏற்றங்களையும் குரு பகவான் வாரி வழங்குவார். வீடு, நிலம் சார்ந்து இருந்த பிரச்சினைகள் சரியாகும். உத்தியோகத்தில் அனுகூலமான விஷயங்கள் நடந்தேறும்.

குடும்ப விஷயத்தினைப் பொறுத்தவரை மூன்றாம் நபர்களின் தலையீடு  பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். பிள்ளைகள் கல்விரீதியாக மந்தநிலையில் இருந்தநிலையில் தற்போது அதில் இருந்து மீண்டு புத்திக் கூர்மையுடன் செயல்படுவர்.

தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் மாற்றங்களை விறுவிறுவென கொடுத்து உங்களை மகிழ்விப்பார் குருபகவான். உடல் ஆரோக்கியம்ரீதியாக முதுகுத் தண்டு வலி, மூட்டு வலி சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும், உடற் பயிற்சிகள் செய்து வருதல் வேண்டும்.

பெற்றோர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்த்தல் நல்லது. குடும்பத்துடன் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வருதல் வேண்டும். மேலும் சனிஸ்வர பகவான் கோவிலுக்குச் சென்று விபூதி எடுத்துவந்து தினமும் பூசி வருதல் வேண்டும்.

மேலும் உங்களுக்காக...