ரிஷபம் தை மாத ராசி பலன் 2023!

Published:

10 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார். குரு பகவான் 4 ஆம் இடத்தையும், 12 ஆம் இடத்தையும் பார்க்கிறார். குரு பகவானின் பார்வையால் நட்பு வட்டாரங்களிலும் சரி, உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களிலும் சரி கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும்.

சனி பகவான் 4 ஆம் இடத்தினைப் பார்ப்பதால் நிறைய தேவையற்ற வீண் விரயச் செலவுகளுக்கு வழி வகுப்பார். ஆரோக்கியம் ரீதியாக மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும், கணவன்- மனைவியினைப் பொறுத்தவரை அன்பு அதிகரிக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் அமையும்.

குழந்தைகளின் கல்விரீதியாக செலவினங்கள் அதிகரிக்கும். புதன் பகவான் 9 ஆம் இடத்திற்கு இடம்பெயர்வதால் யோகத்தினைத் தருவார். தந்தைரீதியாக ஆதாயப் பலன்கள் ஏற்படும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வேலையில் பளுச்சுமை இருப்பதாக உணர்வீர்கள். தொழில்துறை ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றி தரும், தொழிலை அபிவிருத்தி செய்யும் வகையில் லாபத்தினைப் பார்ப்பீர்கள்.

குடும்பத்தில் தாராளமான பணவரவு இருக்கும். பல நாட்களாக நினைத்திருந்த அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மேலும் உங்களுக்காக...