ரிஷபம் பங்குனி மாத ராசி பலன் 2023!

Published:

ரிஷப ராசியினைப் பொறுத்தவரை விரய ஸ்தானத்தில் சுக்கிர பகவான் உள்ளார், தசம ஸ்தானத்தில் சனி, புதன் இணைந்து உள்ளனர். தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக ஏற்றம் தரும் மாதமாக இருக்கும். பணவரவு மிகச் சிறப்பாக இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை படிப்பதை எளிதில் கிரகித்துக் கொள்ளும் திறன் கொண்டு இருப்பர். தெளிவான சிந்தனையுடன் உயர் கல்விக்கு முயற்சிப்பார்கள்.

பிரிந்து இருந்த உடன் பிறப்புகள் இணக்கம் ஆவார்கள். பங்காளிகளுக்குள் இருந்த பூர்விகச் சொத்துப் பிரச்சினைகள் சமரசத்தில் முடியும்.

புதிதாக சொத்துகள் வாங்குவது தொடர்பாக அட்வான்ஸ் கொடுப்பீர்கள். புது வீட்டிற்கு குடி பெயர்தலைச் செய்தல் கூடாது, ஆனால் வீட்டினைக் கட்டவோ அல்லது புதுப்பிக்க நினைப்போர் அதற்கான முயற்சியில் களம் இறங்கலாம்.

சனி பார்வையில் இருப்பதால் உடல்ரீதியாக சிறு சிறு தொந்தரவுகள் ஏற்படும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன் கைகூடுதல், நிச்சயதார்த்தம், முகூர்த்த தேதி குறித்தல் என திருமண காரியங்கள் விறுவிறுவென நடந்தேறும்.

கடன் சார்ந்த விரயச் செலவுகள் ஏற்படும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப ஸ்தானம் வலுப்பெற்று உள்ளது. குடும்பத் தேவைகளுக்காக சுபச் செலவுகள் ஏற்படும், இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருத்தல் வேண்டும்.

வெளிநாடு, வெளியூர் வேலைக்கு முயற்சிப்போருக்கு ஏற்ற காலகட்டமாக இருக்கும். மகா விஷ்ணு வழிபாடு செய்து வருதல் வேண்டும்.

மேலும் உங்களுக்காக...