ரிஷபம் மார்கழி மாத ராசி பலன் 2022!

Published:

ரிஷப ராசியினைப் பொறுத்தவரை ராசிநாதன் 15 நாட்கள் தனுசு ராசியிலும், அடுத்த 15 நாட்கள் மகர ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார். முதல் 15 நாட்கள் தொழில் செய்வோருக்கு பின்னடைவு நிறைந்த மாதமாக இருக்கும்.

ராசியில் செவ்வாய் பகவான் இருப்பதால் கூடுதல் அவசரம் இருக்கும். எதையும் செய்யும் முன் விழிப்புணர்வுடன் செயல்படுதல் நல்லது. பணவரவு இருக்கும்; குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

திருமண காரியங்களுக்குக் காத்திருப்போருக்கு திருமணம் கைகூடி வரும். வேலைவாய்ப்புரீதியாக புது வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறும். சூர்யன் 8 ஆம் இடத்தில் இருப்பதால் தாய்வழி சொந்தங்களால் பிரச்சினைகள் ஏற்படும். வண்டி, வாகனங்களால் செலவுகள் ஏற்படும். தந்தையால் அவப் பெயர் ஏற்படும்.

பூர்விகச் சொத்துகள் ரீதியான வழக்குகளில் நேர்மறையான தீர்ப்புகள் கிடைக்கப் பெறும். 6 ஆம் இடத்தில் கேது பகவான் இருப்பதால் எதிரிகள் ஓடி ஒளிவார்கள், ஆனால் வேலை செய்யும் இடங்களில் ஏதாவது பிரச்சினை ஏற்படும்.

உடல் ஆரோக்கியக் குறைவு ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் கூட்டாளர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள்.

9 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் வேலைவாய்ப்புரீதியாக ஆதாயப் பலன்கள் கிடைக்கப் பெறும். சந்திராஷ்டம நாட்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுதல் நல்லது. மகாலட்சுமியை வழிபாடு செய்து வருதல் வேண்டும்.

மேலும் உங்களுக்காக...