ரிஷபம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

Published:

ரிஷப ராசியினைப் பொறுத்தவரை ஜனவரி மாதம் சுக்கிரன்- சனி பகவானின் கூட்டணி ஆதாயப் பலன்களைக் கொடுக்கும். ராஜயோகம் நிறைந்த மாதமாக இருக்கும். 11 ஆம் இடத்தில் குரு பகவான், 8 ஆம் இடத்தில் புதன் பகவான், 1 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் என கோள்களின் இட அமைவு உள்ளது.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான புரிதல் அதிகரிக்கும். மேலும் நீண்ட நாள் கனவான புது வீடு வாங்குதல், வண்டி, வாகனம் வாங்குதல் என குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். குடும்பத்துடன் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

குடும்பத்தின் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மேலும் பிரிந்த உறவுகள், நட்புகளுடன் மீண்டும் சேருவீர்கள். திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன்கள் கைகூடும்.

மாணவர்களைப் பொறுத்தவரை எடுக்கும் காரியங்களில் வெற்றியினைக் காண்பீர்கள். ஜனவரி மாதம் மட்டுமல்லாது முழு ஆண்டும் நினைத்தது நிறைவேறும் காலமாக இருக்கும்.

உடல் நலனைப் பொறுத்தவரை உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்துவீர்கள். புது வீடு வாங்குவதற்கு அட்வான்ஸ் தொகை கொடுப்பீர்கள். அசையாச் சொத்துகள்ரீதியாக சேமிக்கும் முயற்சியினைச் செய்வீர்கள்.

மேலும் உங்களுக்காக...