ரிஷபம் பிப்ரவரி மாத ராசி பலன் 2023!

By Gayathri A

Published:

7 ஆம் தேதி புதன் தனுசு ராசியில் இருந்து மகரத்துக்கு இடம் பெயர்ந்து சூர்யனுடன் இணைகிறார். சுக்கிரன் 15 ஆம் தேதி உச்சம் அடைகிறார். எதிர்பாராத அதிசயங்கள் நிகழும் மாதமாக இருக்கும். மனதளவில் எதிர்பாராத சந்தோஷங்கள் கிடைக்கப் பெறும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வெளிநாடு செல்ல நினைப்போருக்கு வாய்ப்புகள் அமையப் பெறும். மேலும் வேலைப் பளுவால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு விடிவு தரும் காலமாக பிப்ரவரி மாதம் இருக்கும்.

சனி பகவானின் பெயர்ச்சியால் புது வேலை, இடமாற்றம், பதவி உயர்வு என நீங்கள் நினைத்த விஷயங்கள் ஈடேறும். பொருளாதாரம்ரீதியாக சந்தோஷமான சூழல் ஏற்படும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும்.

தடைகள் பலவற்றால் சோர்ந்துபோன உங்களுக்கு தடைகள் இல்லாத மாதமாக பிப்ரவரி மாதம் இருக்கும்.

பிரிந்த உறவினர்கள் தேடிவந்து சேருவர். மாணவர்களைப் பொறுத்தவரை திட்டமிட்டபடி உயர் கல்வியினை நோக்கிப் பயணிப்பீர்கள். வீடு, வாகனம், சொத்து, ஆடை, ஆபரணங்கள் என அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள்.

உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் நினைத்த விஷயங்கள் உங்களைத் தேடிவரும்.

மேலும் உங்களுக்காக...