Palli vilum palan: நம் வீட்டில் பல்லிகள் கௌளிகள் ஆகியவற்றை நாம் பார்த்திருப்போம். பொதுவாக பல்லிகள் நம் வீட்டில் இருந்தால் மகாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்கிறாள் என்று கூறப்படுகிறது. அப்படியே நம் வீட்டில் பல்லி இருக்கும்போது அது நம் மேல் சில நேரங்களில் விழலாம். இது இயற்கையானது தான்.
பல்லி விழும் பலன்
ஆனால் ஜோதிட சாஸ்திரப்படி பல்லிக்கும் நம் வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதால் பல்லி நம் உடம்பில் விழும் இடத்தை வைத்து பலன்களை கணிக்கின்றனர். பழங்காலத்தில் பல்லியை குறித்து கௌளி சாஸ்திரம் என்ற ஒன்றை எழுதியுள்ளனர் சாஸ்திர வல்லுநர்கள். பல்லிக்கு ஒருசில சக்திகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது. அப்படி நம் உடம்பில் பல்லி எந்த இடத்தில் விழுந்தால் என்ன பலன் என்பதை இனி காண்போம்.
நம் தலையில் பல்லி விழுந்தால் அது அபசகுனமாக கருதப்படுகிறது. கெட்ட நேரத்தை எச்சரிப்பதாக சொல்லப்படுகிறது. உறவுகளுடன் மனஸ்தாபம், எதிர்ப்புகள், நிம்மதியை இழப்பது போன்றவைகள் நடக்கலாம். நேரடியாக தலையில் பல்லி விழாமல் தலைமுடியில் லேசாகப்பட்டு சென்றால் ஏதாவது ஒரு வகையில் நல்லது நடக்கும்.
நெற்றியின் மீது பல்லி விழுந்தால் நல்ல சகுனம். நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் நன்மைகள் வரும். வலது நெற்றியில் விழுந்தால் பணவரவு கிடைக்கும். நம் முகத்தில் பல்லி விழுந்தால் வீட்டிற்கு உறவினர்கள் வரப்போகிறார்கள் என்று அர்த்தம். புருவத்தில் பல்லி விழுந்தால் மிகப்பெரிய அரச பதவியில் இருப்பவரிடம் இருந்து உதவி கிடைக்கும். கண்கள் அல்லது கன்னங்களில் மீது பல்லி விழுந்தால் ஏதோ ஒரு செயலுக்காக உங்களுக்கு தண்டனை கிடைக்கப் போகிறது என்பது என்று அர்த்தம்.
மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கும். இடது பார்வின் மீது பல்லி விழுந்தால் சுகம் கிடைக்கும். இடது பக்க கழுத்து பகுதியில் பல்லி விழுந்தால் நீங்கள் செய்யப் போகும் காரியம், ஜெயிக்கும். வலது கழுத்தில் பல்லி விழுந்தால் பிறருடன் விரோதம் ஏற்படும். இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால் வீட்டில் சந்தோசம் உண்டாகும். வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால் உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம்.
தொடைப்பகுதியில் பல்லி விழுந்தால் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் மனக்கசப்பு ஏற்படும். பாதத்தில் பல்லி விழுந்தால் வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வயிறு அல்லது தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் தங்கம் வைரம் உட்பட நவரத்தினங்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
பல்லி விழும் பலன்கள்
இப்படி உடலில் எந்த பாகத்தில் பல்லி விழுந்தால் என்னென்ன பலன்கள் என்று ஜோதிட சாஸ்திரம் முறைப்படி எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதில் பரிகாரம் என்னவென்றால் எந்த பாகத்தில் பல்லி விழுந்தாலும் முதலில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் அல்லது வீட்டிலேயே விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்ய வேண்டும்.