மேஷம் புத்தாண்டு ராசி பலன் 2023!

2023 ஆம் ஆண்டு ஒரு சிறப்பான மாற்றத்தினைக் கொண்ட ஆண்டாக இருக்கும். நல்ல வேலை, வெளியூர் வேலை, கனவு வேலை என நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும் வகையிலான விஷயங்கள் நடைபெறும். சனி பகவானால் ஏற்படக்…

Mesham

2023 ஆம் ஆண்டு ஒரு சிறப்பான மாற்றத்தினைக் கொண்ட ஆண்டாக இருக்கும். நல்ல வேலை, வெளியூர் வேலை, கனவு வேலை என நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும் வகையிலான விஷயங்கள் நடைபெறும். சனி பகவானால் ஏற்படக் கூடிய பரிபூரண பலனாக இது இருக்கும்.

ராகு மற்றும் கேது 1 மற்றும் 7 ஆம் இடத்திலும், குரு பகவான் 12 ஆம் இடத்திலும் என கோள்களின் இட அமைவு உள்ளது. திருமண காரியங்களுக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு தடங்கல்கள், அலைச்சல்கள் இருக்கும். காதலர்கள் வீட்டில் காதலைச் சொல்லும்போது எதிர்ப்புகள் இருக்கும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை குடும்பத்திற்கு நேரம் செலவிட முடியாத அளவு வேலைரீதியாக பளுச் சுமை இருக்கும். பிரச்சினைகள் தரும் விஷயங்களை குடும்பத்தில் பேசுவதை முடிந்தளவு தவிர்க்கவும். வீண் பேச்சுகள் பெரிய அளவிலான பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும்.

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை பெரிய அளவிலான உடல் கோளாறுகள் எதுவும் இருக்காது. பண வரவு மிகச் சிறப்பாக இருக்கும். அசையும், அசையாச் சொத்துகளில் நிச்சயம் முதலீடு செய்வீர்கள்.

வண்டி, வாகனங்கள் வாங்குதல், தங்க நகைகள் வாங்குதல், வீடு வாங்குதல், நிலம் வாங்குதல், மனை வாங்குதல் என குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை வெளிநாடு, வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்புகள் அமையப் பெறும். இல்லத்தரசிகளுக்கு சாதகமான மாதமாக இருக்கும், இதனால் மன நிறைவுடன் இருப்பார்கள்.