சனி பகவான் அடுத்த வீட்டிற்கு இடப்பெயர்ச்சி செய்கிறார். குரு 10 ஆம் இடத்தில், செவ்வாய் 12 ஆம் இடத்தில், சுக்கிரன், புதன், சூர்யன் 6 ஆம் இடத்திலும் இருப்பர்.
வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புதிய வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு, இடமாற்றம், பதவி உயர்வு என உங்களுடைய எதிர்பார்ப்புகள் ஈடேறும் மாதமாக இருக்கும்.
தொழில்ரீதியாக கடன் ஏற்பட்டாலும் நீங்கள் விரைவில் கடனை அடைத்து முடிப்பீர்கள். பிள்ளைகள்ரீதியாக வீண் செலவுகள் ஏற்படும், பெற்றோருக்கு உடல்ரீதியாக மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
வீட்டில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களில் வீண் செலவுகள் ஏற்படும். திருமண காரியங்கள் தள்ளிப் போகும் காலமாக இருக்கும். கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் பெரிதாகும்.
காதலர்கள் பொறுமையுடன் செயல்படாவிட்டால் காதல் பிரிவு வரை கொண்டு சென்று விடும். உடல் ஆரோக்கியம்ரீதியாக அக்கறையுடன் செயல்படுதல் நல்லது.
மாணவர்கள் உயர் கல்விரீதியாக குழப்பம் நிறைந்து காணப்படுவார்கள். தேர்வுகளில் மறதி ஏற்படும், அதீத முயற்சி செய்யுங்கள். வண்டி, வாகனங்கள் வாங்கும் முடிவை கொஞ்சம் தள்ளிப் போடவும், வெளியூர்ப் பயணங்கள் இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும்.