மிதுனம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

Published:

மிதுன ராசியினைப் பொறுத்தவரை விபரீத ராஜயோகம் அடிக்கும் மாதமாக இருக்கும். மேலும் குடும்பத்தில் சுப செலவுகள் நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஆனந்தமான மனநிலை காணப்படும்.

பிரிந்த உறவினர்கள் மீண்டும் ஒன்று சேர்வர்; குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். 9 ஆம் இடத்தில் சனி பகவான் உள்ளார். புதன்- சுக்கிரன் 11 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளனர்.

குரு பகவான் 11 ஆம் இடத்திற்குப் பெயர்வதால் வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை ஏற்றம் நிறைந்ததாக இருக்கும். ராகுபகவானுடன் குரு பகவான் இணைவதால் குரு செய்யவிருக்கிற நல்ல காரியங்களை ராகு பகவானே செய்து முடிப்பார்.

தொழில்ரீதியாக சிறப்பான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். எந்தவொரு கோள்களும் தொந்தரவு, இடையூறுகள் என எதையும் தராது. எடுக்கும் புது முயற்சிகள் லாபகரமானதாக இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்த வரன் கைகூடும். காதலர்களுக்கு பெற்றோர் மத்தியில் இருந்த எதிர்ப்பு சரியாகி ஏற்றுக் கொள்வர்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை பிரிந்திருந்த கணவன்- மனைவி ஒன்று சேர்வர். உடன் பிறப்புகளுடன் இருந்த கருத்து வேற்றுமைகள் சரியாகும்.

எதிர்மறையான மனநிலை விலகி தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படுவர். ராகு- குரு பகவான் இணைவு எதிர்பாராத அதிர்ஷ்டத்தினைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியம்ரீதியாக ஏற்கனவே இருந்த தொந்தரவுகள் சரியாகும்.

மேலும் உங்களுக்காக...