மே மாதம் ஒன்றாம் தேதி அதாவது சித்திரை 18 ஆம் தேதி மாலை 5:20 மணி அளவில் குரு பெயர்ச்சி நடக்கிறது. இதன் மூலம் மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த குரு பெயர்ச்சியால் மிதுனம் ராசிக்கான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம் ராசியில் குரு பகவான் ஏழு மற்றும் பத்தாம் இடத்திற்கு அதிபதி. இதனால் இந்த ராசியினர் ஆற்றல் மிகுந்தவர்களாக இருப்பார்கள். தர்மத்தை அதிகம் பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். இவ்வளவு காலம் மிதுனம் ராசிக்கு 11-ஆம் இடத்தில் குரு இருந்து பல நன்மைகளை செய்திருப்பார்.
ஆனால் ராசியில் சனியின் நிலையால் பெற்ற பலன்களை அனுபவிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும். மே ஒன்று அன்று குரு பெயர்ச்சியாகிப் மிதுன ராசிக்கு 12ஆம் இடத்திற்கு மாறுகிறார். இந்த இடம் விரய ஸ்தானம் என்று கூறப்படுகிறது.
இதனால் செலவு அதிகரிக்கலாம். புதிய தொழில் தொடங்குவதற்கான முதலீடுகளை செய்வீர்கள். அதேபோன்று ஏழாம் இடத்திற்கும் பத்தாம் இடத்திற்கும் அதிபதியான குரு பன்னிரண்டாம் இடத்திற்கு சென்று இருப்பதால் திருமண காரியங்கள் நடைபெறும். சுப செலவுகள் ஏற்படும்.
பிரிந்து இருக்கும் தம்பதிகளும் ஒன்றிணைவார்கள். அதேபோன்று குருவின் பார்வை எப்போதும் நன்மையை தான் கொடுக்கும். அவ்வகையில் குருவின் பார்வை ராசியின் ஆறாம் இடத்தில் விழுவதால் நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சனை தீரும்.
அதேபோன்று நான்காம் இடத்தில் விழும் குருவின் பார்வையால் திருமணம் முடிந்து பல வருடங்களாக குழந்தை இல்லாமல் தவித்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வீடு கட்டி குடியேறும் யோகம் ஏற்படும்.
குருவின் 9வது பார்வை எட்டாம் இடத்தில் விழும்போது மன கஷ்டங்கள் மாறி போகும். பணியிடத்தில் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை ஏற்படும்.
பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் மேலும் கூடுதல் பலன்களைப் பெற பிரதோஷ தினங்களில் சிவபெருமானை வழிபாடு செய்வதும் சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் சிறப்பு.