மேஷம் மார்ச் மாத ராசி பலன் 2023!

Published:

மேஷ ராசியினைப் பொறுத்தவரை செவ்வாய் பகவான் ரிஷபத்தில் இருந்து மிதுன ராசிக்கு இடப் பெயர்ச்சி ஆகிறார். மேலும் வக்கிர நிவர்த்தி அடைகிறார். சுக்கிரனும்- குரு பகவானும் 12 ஆம் இடத்தில் இருப்பதால் சுப விரயச் செலவுகள் ஏற்படும்.

வேலையினைப் பொறுத்தவரை கூடுதல் பொறுப்புகள் இருக்கும். வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு, மேல் அதிகாரிகளின் பாராட்டு என நேர்மறையான விஷயங்கள் நடக்கப் பெறும்.

வேலைவாய்ப்புரீதியாக புதிதாக வேலை தேடுவோருக்கு நேர்மறையான முடிவுகள் கிடைக்கும் காலமாக இருக்கும். பொருளாதார ரீதியாக பண வரவு சிறப்பாக இருக்கும்; ஆனால் வரவுக்கேற்ற செலவு இருக்கும்.

குடும்பத்தில் திருமண காரியங்கள், புது வீடு கட்டுதல், வீட்டினைப் புதுப்புத்தல், வண்டி வாகனங்கள் வாங்குதல் போன்ற சுப செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை இதுவரை இருந்த உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை திருமணம் கைகூடாமல் இருந்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வரன் அமைதல், திருமண காரியங்கள் விறுவிறுவென நடந்தேறுதல் என அனைத்தும் நடந்தேறும்.

குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள், குடும்ப உறுப்பினர்கள்ரீதியாக பொறுப்புகள் அதிகரிக்கும்.

மேலும் உங்களுக்காக...