மகரம் பங்குனி மாத ராசி பலன் 2023!

Published:

மகர ராசியினைப் பொறுத்தவரை 2 ஆம் இடத்தில் இருக்கும் புதன் பகவான் 3 ஆம் இடத்திற்குப் பெயர்ந்து நீச்ச பங்கம் அடைகிறார். கடன் அதிகரிக்கும் மாதமாக இருக்கும்.

சுக்கிர பகவானால் உடல் ரீதியாக ஆரோக்கிய சார்ந்த பிரச்சினைகள் சரியாகும். உத்தியோகம்ரீதியாக வேலையிழப்பு ஏற்பட்டவர்களுக்கு உங்கள் திறமைக்கேற்ற புது வேலை கிடைக்கப் பெறும்.

வியாபாரம் ரீதியாக செழிப்புடன் இருப்பீர்கள். குழந்தைகள் உங்களின் பேச்சை மதித்து நடப்பதுடன் உங்களிடம் அன்பு பாராட்டுவார்கள். தன வரவு சார்ந்த தடுமாற்றம் ஏற்படும், பணவரவைவிட செலவு அதிகமாகி புதிதாக கடன்களை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

பூமி சார்ந்த முதலீடுகளை இப்போதைக்குத் தள்ளிப் போடவும். மேலும் பூர்விகச் சொத்துப் பிரச்சினைகள் குறித்த பேச்சு வார்த்தைகளைக் காலம் தாழ்த்துங்கள்.

வண்டி, வாகனங்களை உங்கள் பெயரில் வாங்காமல் பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணை பெயரில் வாங்கவும். வண்டி, வாகனங்கள் ரீதியாக செலவுகளும், பிரச்சினைகளும் ஏற்படும்.

குடும்பத்தில் கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் சரியாகி புரிதல் ஏற்படும். மேலும் கடந்த காலங்களால் எதிரிகளால் பல பிரச்சினைகளைச் சந்தித்த உங்களுக்கு அவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அடங்கிப் போகும்.

குடும்ப உறுப்பினர்கள்ரீதியாக வீண் விரயச் செலவுகள் ஏற்படும். தாயின் உடல் நலன் ரீதியாக மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் பணத் தேவை அதிகரிக்கும். முருக வழிபாடு செய்து வருதல் வேண்டும்.

மேலும் உங்களுக்காக...