கட்டிமுடிக்கப்படாத வீட்டில் பூசணிக்காய் கட்டி வைப்பது ஏன்?!

Published:
043ed0369a58fb9b472ab09a94a948d7

புதுவீடு கட்டிக்கிட்டு இருக்கும்போதும், சில குடிப்போன வீடுகளிலும் வெள்ளை பூசணிக்காயை   கட்டித் தொங்கவிடும் பழக்கம் நமது கலாசாரத்தில் இருக்கிறது. பூசணிக்காயை ஏன் கட்டுகிறார்கள்?!என பார்க்கலாமா?!

 வெள்ளைப்பூசணிகாய், நீர்ப்பூசணிக்காய் எனப்படும் சாம்பல் பூசணிக்காய்,  மிக அதிகமான நேர்மறை பிராண சக்தியை உள்ளடக்கியது. எனவேதான், அதை வீட்டுமுன் கட்டித் தொங்கவிடுகிறோம். புதிய வீட்டில் குடியேறும்போது, சில தீய சக்திகளும், பொறாமைக்குணம் கொண்டவர்களும் அங்கே இருக்கலாம். எனவே, ஒரு பூசணிக் காயை நம் வீட்டின் முன் கட்டும்போதே, அந்த இடத்தில் உண்டாகும் நேர்மறை அதிர்வுகள் அந்த இடத்தில் உள்ள எதிர்மறைச் சக்திகளை அகற்றிவிடுகின்றன.

 நம் வீட்டிலேயே ஒரு பூசணிக்காயை வளர்த்தாலும் அதை அந்தணருக்குத் தானமாகக் கொடுத்துவிடும் பழக்கம் இருந்தது. நீங்கள் அதைத் தானமாகக் கொடுக்கும்போது உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக, வட இந்தியாவில் கீழ் ஜாதியினர் பூசணிக்காய் சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருந்த காலமும் உண்டு. ஏனெனில், பூசணிக்காய் சாப்பிடுபவருக்கு உடலும் மனமும் கூர்மையாவதால் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாது. எனவேதான், அவர்கள் பூசணிக்காய் சாப்பிடுவதிலிருந்து தடை செய்யப்பட்டனர். ஆனால், இப்போது அதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. பூசணிக்காயைத் தொடர்ந்து சாப்பிடும்போது நம் மனம் மிகுந்த விழிப்புணர்வை அடைகிறது. புத்திக்கூர்மையும், புத்துணர்வும், சமநிலையும் அதிகரிக்கிறது. இவ்வளவு பிராண சக்தியுடன் இருப்பதால்தான் வீடு கட்டி புதிதாகக் குடியேறும்போது அனைத்து எதிர்மறைச் சக்திகளையும் களைவதற்கான ஒரு வாய்ப்பாக பூசணிக்காயைப் பயன்படுத்துகிறார்கள்!

மேலும் உங்களுக்காக...

Leave a Comment