கடகம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!

By Gayathri A

Published:

ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் கடக ராசிக்கு 10ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார். கடக ராசிக்கார்களைப் பொறுத்தவரை அஷ்டமத்தில் சனி பகவான் உள்ளார், மன அழுத்தம் அதிகம் ஏற்படும்.

வேலைவாய்ப்புரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும் பட்சத்தில் குடும்பத்தைவிட்டுச் செல்வது பல வழிகளிலும் பிரச்சினைகளைக் குறைக்கும்.

தாய்வழி உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும்; உறவில் ஓரளவு சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் சரியாகும். கொடுத்த வாக்கினை பெரிய அளவில் சிரமம் இல்லாமல் காப்பாற்றுவீர்கள்.

பழைய கடன்களை அடைப்பீர்கள். எதிரிகள் விஷயத்தில் இருந்த பதட்டங்கள் குறையும். திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும், திடீர் பணவரவு ஏற்படும்.

தொழில்ரீதியாக மேல் அதிகாரிகளுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு, சக பணியாளர்களுடன் மிகக் கவனமாகப் பழகுதல் வேண்டும். உத்தியோகம்ரீதியாக பல பிரச்சினைகள் ஏற்படும்.

மாணவர்கள் கல்விரீதியாக நிலையற்ற தன்மையுடன் காணப்படுவார்கள். சிவபெருமானை வழிபாடு செய்து வருதல் வேண்டும்.

மேலும் உங்களுக்காக...