குரு பெயர்ச்சி 2025: சுப கிரகமான குருபகவான் தற்போது ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். 2025ஆம் ஆண்டு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் பயணம் செய்வார். குரு பகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளின் மீது விழுகிறது. குருவின் பயணம், பார்வை, வக்ர சஞ்சாரத்தினால் 2025ஆம் ஆண்டு முதல் திடீர் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்? லக்கி பாஸ்கர் போல கோடீஸ்வரர் ஆகும் ராசிக்காரர்கள் யாரென்று பார்க்கலாம்.
மேஷம்
உங்களுடைய ராசிக்கு தனம் மற்றும் குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் வக்ர நிலையில் பயணம் செய்வதால் வேலையில் இருப்பவர்களுக்கு லாபமும் புரமோசனும் கிடைக்கப்போகிறது. பிப்ரவரிக்குப் பிறகு நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார் குரு. மே மாதத்திற்கு பிறகு மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குருவினால் ராஜயோகமும் அரச பதவியும் தேடி வரப்போகிறது.
ரிஷபம்
ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள குரு பகவான் வக்ர நிலையில் பயணம் செய்வதால் புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம் சுப காரியம் நடைபெறும். புத்திரபாக்கியம் கைகூடி வரப்போகிறது. அடுத்த ஆண்டு முதல் ராஜாதி ராஜயோகம் தேடி வரப்போகிறது.
கடகம்
லாப குரு வக்ர நிலையில் பயணம் செய்வதால் எதிர்பாராத பணவருமானம் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஷேர் மார்க்கெட், கிரிப்டோ கரன்சி முதலீடுகள் லாபத்தை கொட்டிக்கொடுக்கும். 2025ஆம் ஆண்டின் லக்கி பாஸ்கர் நீங்கதான்.
கன்னி
குரு பாக்கிய ஸ்தானத்தில் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். 2025ஆம் ஆண்டு குரு வக்ர பெயர்ச்சி காலத்திலும் உங்களுடைய வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகிறது.
விருச்சிகம்
களத்திர ஸ்தானத்தில் கல்யாண குருவாக வருவதால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. உங்கள் ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் வெற்றி மீது வெற்றிகள் தேடி வரப்போகிறது. பணம் பல வழிகளில் இருந்தும் கொட்டப்போகிறது.
மகரம்
5ஆம் வீடான புத்திர ஸ்தானத்தில் குரு வக்ர நிலையில் பயணம் செய்தாலும் உங்கள் ராசிக்கு குருவின் பார்வையும் கிடைப்பதால் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும்.
கும்பம்
குரு பகவான் சுக ஸ்தானத்தில் வக்ர நிலையில் பயணம் செய்தாலும் 2025ஆம் ஆண்டு முதல் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. ஏழரை சனியால் ஏற்பட்ட பாதிப்புகளை நீக்கப்போகிறார் குருபகவான். தடைபட்ட வருமானங்கள் தடையின்றி கிடைக்கப்போகிறது. கும்ப ராசிக்காரர்களுக்கு விடியல் பிறக்கப்போகிறது.