தனுசு மார்கழி மாத ராசி பலன் 2022!

Published:

மார்கழி மாதம் அமோகமான மாதமாக இருக்கும், பணவருவாய், பொருள் வருவாய் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம், குதூகலம் இருக்கும். 4 ஆம் இடத்தில் குருபகவான் ஆட்சி பீடத்தில் இருக்கிறார்.

தாயின் உடல்நலன் சிறப்பாக இருக்கும், குழந்தைகள் கல்வீரீதியாக சிறப்புடன் செயல்பட்டு பெருமையினைக் கொண்டு சேர்ப்பர். அசையாச் சொத்துகளில் முதலீடு செய்வீர்கள், 5 ஆம் இடத்தில் ராகு பகவான் உள்ளார்.  பூர்விகச் சொத்துகள்ரீதியாக பிரச்சினைகள் ஏற்படும்.

மேலும் குழந்தைகளின் உடல் நலனில் பாதிப்பு ஏற்படும். குல தெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லது. வேலை செய்யும் இடங்களில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

கணவன்- மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் தந்தையால் குடும்பத்தில் அனுகூலம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். வெளிநாடு செல்ல நினைக்கும் அன்பர்களுக்கான வாய்ப்புகள் அமையப் பெறும்.

10 ஆம் இடம் குரு பார்வையில் இருப்பதால் பதவிரீதியாக இடமாற்றம், பதவி உயர்வு, மேல் அதிகாரிகளின் பாராட்டு என அனைத்தும் கிடைக்கப் பெறும்.

தொழிலை அபிவிருத்தி செய்ய நினைப்போர், கடன் வாங்கியும் கூட அபிவிருத்தி செய்யலாம். உடன் பிறப்புகளுடன் பிரச்சினை ஏற்படும். செலவினங்கள் ஏற்பட்டாலும், அது சுப செலவாகவே இருக்கும்.

மேலும் உங்களுக்காக...