தனிமை மற்றும் அமைதியினை விரும்பும் குணம் கொண்ட 7 ஆம் தேதியில் பிறந்தவர்களே! எந்தவொரு விஷயம் நடந்தாலும் சரி பொறுமையோடு செயல்படுவதில் நீங்கள்தான் நம்பர் 1 என்றே சொல்லலாம்.
சாமர்த்தியமாகச் செயல்பட்டு அந்த பொறுமையான குணத்தையும் உங்களுக்குச் சாதகமானதாக மாற்றிக் கொள்வீர்கள். நேர்மையான குணம் கொண்ட நீங்கள் உங்களுடன் பழகுபவர்களும் நேர்மறையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருப்பீர்கள்.
விளையாட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் நீங்கள், அந்தத் துறையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உங்களுக்கு பெரிய அளவிலான விஐபி அந்தஸ்து கிடைக்கும்.
கலாச்சாரம் சார்ந்த விஷயங்களைப் பின்பற்றுதல், தெய்வ வழிபாடு, முன்னோர் வழிபாடு என நீங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வீர்கள். கல்வியினை மட்டும் ஆயுதமாகக் கொண்டு நீங்கள் எண்ணிய கோட்டையினை அடைந்தே தீர்வீர்கள். காலம் தாழ்த்தினாலும் சிங்கம்போல் உங்களுக்கான அரியாசனத்தில் இறுதியில் அமர்ந்தே தீர்வீர்கள்.
தெய்வ நம்பிக்கை அதிக அளவில் உங்களுக்கு உண்டு. உங்களின் மனமானது குழந்தை மனம் போன்றது. கள்ளம் கபடமின்றி பழகும் தன்மை கொண்டு இருப்பீர்கள். அடுத்தவர்களின் பிரச்சினையில் தேவையில்லாமல் நீங்கள் மூக்கினை நுழைக்க மாட்டீர்கள். சகிப்புத் தன்மையால் உறவுகளைப் பிரியாமல் கட்டிக் காப்பீர்கள்.
உங்களின் அணுகுமுறை, செயல்பாடு, பேசும் திறன் அனைத்தும் மற்றவர்களிடம் இருந்து தனித்தே தெரியும். செய்யும் தொழிலில் புகழ் மற்றும் வெற்றியானது கிடைக்கும். வெளிநாட்டு வேலையால் வாழ்க்கையால் வெளிச்சம் கிடைக்கும்; சிறப்பான அந்தஸ்தைக் கொடுக்கும்.
அதிர்ஷ்ட தேதிகள் மற்றும் நிறங்கள்
7 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டத் தேதிகள்: 1,10,19
நீங்கள் தவிர்க்க வேண்டிய தேதிகள்: 7, 8,16
உங்களுக்கான நிறம்: வெளிர் மஞ்சள் நிறம், வெளிர் பச்சை நிறம், வெளிர் நீலம்
தவிர்க்க வேண்டிய நிறங்கள்: சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தைத் தவிர்க்கவும்.
உங்களுக்கான நவரத்தினக் கல்- வைடூரியக் கல் பயன்படுத்தவும்; மேலும் இதனை தங்கத்துடன் மட்டுமே போடவும்.
தொழில் துறை- நீதித் துறை, எழுத்துத் துறை, பேச்சு சார்ந்த துறைகள், மருத்துவத் துறைகள் உங்களுக்கு ஏற்ற துறைகளாகும்.
முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி வாருங்கள். மேலும் கொழுக்கட்டை, மோதகம், சர்க்கரைப் பொங்கலிட்டு விநாயகர் வழிபாடு செய்வதுடன் அன்னதானமாகவும் செய்து வாருங்கள்.