பிறந்த தேதிப் பலன்கள்: 3 ஆம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!

எல்லோரையும் மதிக்கும் குணம் கொண்ட 3 ஆம் தேதியில் பிறந்தவர்களே! 3 ஆம் தேதியில் பிறந்தவர்கள் குரு பகவான் அருள் கொண்டவர்கள். மற்றவர்களுக்கு எந்தவொரு விஷயத்தையும் அக்கறையுடன் சொல்லிக் கொடுக்கும் குணம் கொண்டவர்கள்; இது…

pirantha naal palan day 3

எல்லோரையும் மதிக்கும் குணம் கொண்ட 3 ஆம் தேதியில் பிறந்தவர்களே! 3 ஆம் தேதியில் பிறந்தவர்கள் குரு பகவான் அருள் கொண்டவர்கள். மற்றவர்களுக்கு எந்தவொரு விஷயத்தையும் அக்கறையுடன் சொல்லிக் கொடுக்கும் குணம் கொண்டவர்கள்; இது உங்களின் ஆகச் சிறந்த திறன் என்று எடுத்துக் கொள்ளலாம்.

அறிவு, மூளை பலம் போன்றவற்றினை அதிகமாகக் கொண்டவர்கள்; ஆகச் சிறந்த அறிவு, ஆற்றலுடனும் நல்ல சிந்தனையுடனும் இருப்பீர்கள். மற்றவர்களுக்காக ஓடி ஓடி உதவும் தன்மை சிறு வயது முதலே கொண்டு இருப்பார்கள். சுய நலம் பாராமல் உதவும் குணம் கொண்ட நீங்கள் சுய நலக் காரர்களுடன் சற்று விலகியே இருப்பீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

உங்களின் பேச்சுத் திறமையால் எதிரிகளும் உங்களுக்கு நண்பர்கள் ஆகிப் போவார்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி பழகும் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.

மன பலத்துடன் சரீர பலமும் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்; கலைத் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்களாகவே இருப்பர். யாரேனும் ஏதேனும் அவமானப்படுத்தும் வகையில் இவர்களை இகழ்ந்து சொல்லிவிட்டால் அவர்களுக்கு வார்த்தைகளால் பதிலடி கொடுக்காமல் செய்கையால் பதிலடி கொடுக்கும் குணம் கொண்டவர்கள்.

30 வயதிற்கு மேல் உங்களின் வாழ்க்கை நீங்கள் நினைத்தபடி முன்னேற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். பொது வாழ்க்கையில் ஆர்வம், சமூக உணர்வு போன்ற குணங்கள் 3 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு உள்ளூற ஊறிக் கொண்டே இருக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள் மற்றும் நிறங்கள்

3 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டத் தேதிகள்: 3,21,30

நீங்கள் தவிர்க்க வேண்டிய தேதிகள்: 6,15,24

உங்களுக்கான நிறங்கள்: மஞ்சள் நிறம், ஆரஞ்சு நிறம், இளம் சிவப்பு நிறம், வெளிர் நீல நிறம்.

தவிர்க்க வேண்டிய நிறங்கள்: காப்பி, பச்சை மற்றும் கருப்பு நிறங்களைத் தவிர்க்கவும்.

உங்களுக்கான நவரத்தினக் கல் – புஷ்பராகம் பயன்படுத்தவும்; மேலும் இதனை தங்கத்துடன் மட்டுமே போடவும். கனக புஷ்பராகவும் போடலாம்; ஆனால் அதனை பிளாட்டினத்துடன் மட்டுமே போட வேண்டும்.

தொழில் துறை – பொறியியல் துறை, விஞ்ஞானத் துறை, கணிதத் துறை, எழுத்து சார்ந்த துறைகள் உங்களுக்கு ஏற்ற துறைகளாகும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வருடம் ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வழிபாடு செய்து வருதல் வேண்டும்..

அதுபோக அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு மாதம் ஒருமுறை என்ற அளவிலாவது சென்று முருகப் பெருமானை மனமுருகி வழிபட்டு வரவும்.