தவறான தோஷங்கள் நீங்க- தீபம் எரிந்த மலையில் பிராயசித்த அபிசேகம்

திருவண்ணாமலையில் வருடம் தோறும் கார்த்திகை தீப விழா பெரும்விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கார்த்திகை தீபத்தன்று மலை மீது தீபம் ஏற்றப்பட்டு 11 நாட்களுக்கு அந்த தீபம் சில கி. மீ தெரியுமளவுக்கு மலை…

திருவண்ணாமலையில் வருடம் தோறும் கார்த்திகை தீப விழா பெரும்விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கார்த்திகை தீபத்தன்று மலை மீது தீபம் ஏற்றப்பட்டு 11 நாட்களுக்கு அந்த தீபம் சில கி. மீ தெரியுமளவுக்கு மலை மீது எரியும். பின்பு தீப கொப்பறை கீழே கொண்டு வரப்பட்டு அந்த மை பிரசாதமாக வழங்கப்படும்.

64eec2ec6f8d859ea7f9735dd2592afa-1

இந்த மலைக்கு தீபத்தை ஒட்டி பலர் மலை மீது நடந்து சென்றிருப்பார்கள் இங்கு மலையே சிவனாக வழிபடப்படுவதால் பல பக்தர்கள் இங்கு மலையை மிதித்து வழிபாட்டுக்காக மலை ஏறியதாலும் பரிகார பூஜை செய்யப்படுகிறது.

அதன்படி பக்தர்கள் மலை ஏறியதற்கு பிராயசித்த பூஜை தீபத்திருவிழா முடிவடைந்த பின்னர் கோயிலில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீபத்திருவிழா நிறைவடைந்ததையடுத்து நேற்று அண்ணாமலையார் கோயிலில் பிராயசித்த பூஜை நடைபெற்றது. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன