வீட்டில் தங்கம் தங்கனுமா?!

Published:
58e60c612e5a7dbd68470534ce11fe7c

பசி, தூக்கம் மறந்து உழைத்து, சிறுக சிறுக சேமித்து தங்க நகை வாங்கினாலும், அதை நீண்ட நாட்கள் அணிய முடியாமல் அனைத்தும் அடமானத்துக்கு சென்று, பெருத்த மனக்கவலையுடன் உள்ளோருக்கு சிறந்ததொரு பரிகாரம்.

தங்க நகை வாங்கவும், அணியவும் அதற்கென்று தகுந்த நட்சத்திரங்கள் உள்ளன. அந்த நட்சத்திரங்களில் பொன் நகை வாங்கி அணிபவர்களை விட்டு ஆயுள்வரை அந்த நகைகள் செல்வதில்லை. வாங்கிய பொன் நகைகளை முதன்முதலில் அணிய சனிக்கிழமை மிக நல்லது.

adb15bf9f400edeca66dbd10a54954e4-2

பொன் நகை வாங்க வேண்டிய நட்சத்திரங்கள்

அஸ்வினி, 
ரோகிணி, 
மிருகசீரிடம், 
பூசம், 
அஸ்தம், 
சித்திரை, 
அனுஷம், 
ரேவதி, 
ஆகிய எட்டு நட்சத்திரங்களும் பொருத்தமானவை. மேற்கண்ட எட்டு நட்சத்திரங்களும் பஞ்சமி, சஷ்டி தசமி, ஏகாதசி, பெளர்ணமி, ஆகிய திதிகளில் வரும்போது முதன்முதலில் அணியப்படும் நகைகள் பத்து தலைமுறைகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும். சுவர்ண லட்சுமி என்றும் குடியிருப்பாள். பொன் நகை தங்காத “தங்க தோஷம்’ விலகும்.

44890ef3b83fa8eecbffc20b1135163d-1

அடகுப்போன நகைகளை மீட்டு, மேற்கண்ட நட்சத்திரம், திதிகளில் அணிந்தால் மீண்டும் அந்த நகை அடகுக்குச் செல்லாது. மேற்கண்ட நட்சத்திரம் அல்லது நாட்களில் தங்க நகை வாங்குவதும், வாங்கிய நகைகளை அணிவதும் சிறப்பு. அந்நாளில் நகைகளை அணிந்தால் வாழ்நாள் முழுவதும் பொன் நகையோடும் புன்னகையோடும் வாழ்வர்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment