உங்களின் எதிர்பார்ப்புகளை எப்படியும் பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய கெட்டிக்காரர்களான 9 ஆம் தேதியில் பிறந்தவர்களே! உங்களுக்கென கூட்டத்தினை எப்போதும் ஏற்படுத்திக் கொள்வீர்கள்; உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் உங்களுக்காக ஆதரவு கொடுப்பதற்காகவே இருப்பார்கள்.
எதுவும் தெரியாத கள்ளம் கபடமற்ற நபர்போல் பார்ப்பதற்கு இருப்பீர்கள்; ஆனால் நீங்கள்தான் நடக்கும் அனைத்து விஷயங்களின் காரண கர்த்தா என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கும்.
சுய கௌரவம் என்பது உங்களின் பலம்; பிறருக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணம் சுட்டுப் போட்டாலும் வராது. உங்களின் செயலில் யாரும் தலையிடக் கூடாது என்று எப்போதும் நினைப்பவர் நீங்கள். திடீர் உணர்ச்சிவசப்படும் குணம்தான் உங்களின் பெரும் பலவீனமாகும்.
திடீர் கோபங்களால் பல நேரங்களில் உங்களுக்கு நெருக்கமானவர்களை இழக்க நேரிடும். மேலும் சில அதிர்ஷ்டம் தரும் காரியங்களும் கை நழுவிப் போகும்.
அழியாப் புகழுக்குச் சொந்தக்காரர் யார் என்று கேட்டால் நிச்சயம் அது நீங்கள்தான். ஆளுமைத் திறன் உங்களிடம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு பூசல்கள் எப்போதும் இருக்கும்; ஆனால் பூசல்களை எப்போதும் திறம்பட கையாள்வதில் உங்களை மிஞ்சியவர் எவரும் கிடையாது.
மோசமான சூழ்நிலைகளையும் சரியாகக் கையாண்டு நல்ல பெயர் வாங்கிவிடுவீர்கள். சமூக அக்கறை அதிகம் கொண்டு இருப்பவர்கள். பட்டம், பதவி, செல்வாக்கு, பணம் போன்ற விஷயங்களில் பெரிதளவில் நாட்டம் இல்லாமல் இருப்பார்கள்.
உங்கள் மனம்போல் உங்களுக்கு வாழ்க்கைத் துணை அமையும். இருவரும் ஒன்றாகப் பாடுபட்டு முன்னேற்றம், செல்வம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட தேதிகள் மற்றும் நிறங்கள்
9 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டத் தேதிகள்: 6,15,24
நீங்கள் தவிர்க்க வேண்டிய தேதிகள்: 2,11, 20
உங்களுக்கு உகந்த நிறங்கள்: சிகப்பு நிறம், இளம் சிவப்பு நிறம்.
நீங்கள் தவிர்க்க வேண்டிய நிறங்கள்: நீலம் மற்றும் பச்சை நிறத்தைத் தவிர்க்கவும்.
நவரத்தினக் கல்- இரத்தினப் பவளக் கல் பயன்படுத்தவும்; மேலும் இதனை தங்கத்துடன் மட்டுமே போடவும்.
தொழில் துறை – ஐடி தொழில், அறிவியல் சார்ந்த தொழில், கெமிக்கல் சார்ந்த தொழில் போன்ற துறைகள் உங்களுக்கு ஏற்ற துறைகளாகும்.
மலை மேல் வீற்றிருக்கும் முருகப் பெருமான் கோவிலுக்குச் சென்று வாருங்கள்; மேலும் கந்த சஷ்டி விரதம் கடைபிடிப்பது நல்லது. கந்த சஷ்டி கவசத்தை தினமும் படித்து வாருங்கள்.