நடிக்க வருவதற்கு முன்பே திருமணம்.. எம்ஜிஆர்-சிவாஜிக்கு வில்லி.. நடிகை ராஜ சுலோச்சனாவின் திரைப்பயணம்!

திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே திருமணம் ஆகி அதன்பின் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து, ஒரு சில படங்களில் நாயகி கேரக்டரில் நடித்தவர் அதன் பின்னர் காலப்போக்கில் எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு வில்லியாகவும் நடித்தார். அப்படி ஒரு நடிகை தான் ராஜ சுலோச்சனா.

நடிகை ராஜ சுலோச்சனா விஜயவாடாவில் பிறந்து வளர்ந்தார். அவர் சிறு வயதிலேயே நடனம் நாட்டியம் போன்ற கலைகளில் ஆர்வமாக இருந்தார். அவரது தந்தை அனைத்து கலைகளையும் கற்க அனுமதித்தார். நாட்டிய பேரொளிகளாக இருந்த லலிதா, பத்மினி போல் தானும் ஒரு நல்ல நடன கலைஞராக வரவேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது.

இந்த நிலையில் தான் ராஜ சுலோச்சனாவுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடந்தது. அவருக்கு சியாம் சுந்தர் என்ற மகனும் பிறந்தார். அப்போது சென்னையில் நடந்த ஒரு நாட்டிய குழுவில் நடனம் ஆட வேண்டிய பெண் ஒருவர் வரவில்லை என்பதால் தனது தோழியின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போதுதான் அவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி திரைப்பட இயக்குனர் ஒருவரின் கண்களில் பட்டு, திரைப்படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார். அந்த படம் தான் குணசேகரி என்ற தெலுங்கு படம்.

பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை சில்க் ஸ்மிதா… அவர் அப்ப சொன்ன காரணம் தான் ஹைலைட்டே…

raja sulochana1

இந்த படத்தில் அவருக்கு மிகவும் சின்ன கேரக்டர் தான் என்றாலும் அவரது கேரக்டர் சொல்லிக் கொள்ளும் வகையில் இருந்தது. இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதன் பிறகு தனது குடும்பத்தினரை சமாதானம் செய்து நடித்தார். இந்த படத்தின் வரவேற்புக்கு பின்னர் அவருக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஒருசில தெலுங்கு படங்களில் சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்தாலும், ராஜ சுலோச்சனாவுக்கு பெயரை வாங்கிக் கொடுத்த திரைப்படம் என்றால் ஏபி நாகராஜன் இயக்கத்தில் உருவான மாங்கல்யம் என்ற திரைப்படம்தான். இந்த படம் வெளியே வந்த பிறகுதான் யார் இந்த ராஜ சுலோச்சனா என்று பலர் தேடத் தொடங்கினர்.

அதன் பிறகு எம்ஜிஆருடன் குலேபகாவலி, ஏபி நாகராஜன் இயக்கத்தில் உருவான பெண்ணரசி, சிவாஜி கணேசன் நடித்த ரங்கோன் ராதா உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். அவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது மட்டுமின்றி அவரது கேரக்டருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அதன் பிறகு வணங்காமுடி, பாரத விலாஸ், நான் அவன் இல்லை, சில நேரங்களில் சில மனிதர்கள், துணிவே துணை, காயத்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தில் சிவாஜி கணேசன் ஜோடியாக நடித்த ராஜ சுலோச்சனா, கிட்டத்தட்ட அந்த படத்தில் வில்லி போலவே நடித்திருப்பார். அதேபோல் எம்ஜிஆர் நடித்த இதயக்கனி என்ற திரைப்படத்தில் அவர் கொள்ளை கூட்டத் தலைவி என்ற வில்லி கேரக்டரில் நடித்தார். அதேபோல் துணிவே துணை படத்திலும் அவர் வில்லி தான். குடும்பப்பாங்கான கேரக்டர்களில் நடித்த ராஜ சுலோச்சனாவுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் வில்லி வேடம் வந்ததால் அதையும் ஏற்று அந்த கேரக்டரில் சிறப்பாக நடித்தார்.

டைட்டிலில் யார் பெயர் முதலில் போடுவது? மூன்று நடிகைகள் இடையே சண்டை.. சமயோசிதமாக யோசித்த ஏவிஎம்..!

raja sulochana2

சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படமான பராசக்தியில் அவருடைய தங்கையாக கல்யாணி என்ற கேரக்டரில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் ராஜ சுலோசனா தான். ஆனால் அந்த நேரத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த வாய்ப்பை இழந்ததாக பின்னாளில் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த கேரக்டரில் மட்டும் அவர் நடித்திருந்தால் அவருடைய திரைப்பட வாழ்க்கை வேற லெவலில் இருந்திருக்கும். ஆனாலும் அவருடைய திரையுலக வாழ்க்கை திருப்திகரமாகவே அமைந்தது.

இந்த நிலையில் தான் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அவர் பிரபல தெலுங்கு மற்றும் கன்னட திரைப்பட இயக்குனர் சிஎஸ் ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிஎஸ் ராவ் என்பவர் ஏற்கனவே நடிகை கண்ணாம்பாள் மகளை திருமணம் செய்து கொண்டவர். மனைவி காலமானதும் அவர் ராஜ சுலோச்சனாவை திருமணம் செய்து கொண்டார்.

ராஜ சுலோச்சனா மற்றும் சிஎஸ் ராவ் தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். இந்த பெண் குழந்தைகளின் ஒருவர் தற்போது அமெரிக்காவில் உள்ளார்  இன்னொருவர் சென்னையில் உள்ளார்.

நடிகை ராஜ சுலோச்சனா தனது இறுதி காலத்தில் சென்னையில் நாட்டிய பள்ளி ஒன்றை ஆரம்பித்து அதில் பல குழந்தைகளுக்கு நாட்டியம் சொல்லிக் கொடுத்தார். அவரது நாட்டிய பள்ளியில் நடனம் பயின்ற பலர் இன்று பிரபலமாக உள்ளனர்.

ஜோதிகாவும் இல்ல… சிம்ரனும் இல்ல… விஜய் 68 படத்தில் ஹீரோயினாக களமிறங்கும் அந்த நடிகை!

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜ சுலோச்சனா உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்திருந்தார். அதோடு அவரது நாட்டியப் பள்ளியை தொடர்ந்து நடத்த உதவி செய்வதாக வாக்குறுதி அளித்து இருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...