அது இதுன்னு பேசாலாமா? அப்போ அவ, இவன்னு பேசட்டுமா.. மீண்டும் பயில்வான் சர்ச்சைப் பேட்டி

நடிகரும், சினிமா பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தான் நடித்துப் பெற்ற புகழை விட கடந்த சில வருடங்களாக நடிகர், நடிகைகளைப் பற்றி சர்ச்சைக் கருத்துக்களைக் கூறி அதன் மூலம் புகழ்பெற்றதே அதிகம் எனலாம். தனது யூ டியூப் பக்கத்திலும், மற்ற யூ டியூப் சேனல்களிலும் பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றி பேசி அவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.

கடந்த ஆண்டு நடிகை ரேகா நாயர் பற்றிப் பேச அவர் கோபத்தில் பொங்கி எழுந்து காலையில் அவர் பெசன்ட் நகர் பீச்சில் வாக்கிங் செல்லும் போது மறித்து ஏன் என்னைப் பற்றி இவ்வாறு பேசினீர்கள்.. ஆதாரம் உள்ளதா.. கண்டபடி பேசாதீர்கள் என ஒருமையில் திட்டி பதிலடி கொடுத்தார். அதைப்போலவே நடிகை ராதிகாவும் பயில்வான் ரங்கநாதனை எச்சரித்திருந்தார்.

இப்படி நடிகைகள் அவரின் கருத்துக்களுக்கு எதிராகப் பேசிவரும் வேளையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடிகை ஷகீலாவும், குயிலியும் பயில்வான் ரங்கநாதனைப் பேட்டி கண்டனர். அதில் ஷகீலா பயில்வான் ரங்கநாதனிடம் உங்கள் மகள் இன்னொரு பெண்ணைத்தான் காதலிக்கிறார் என்று கூற, பயில்வான் ரங்கநாதன் அதற்கு நீங்கள் பார்த்தீர்களா.. நாக்கு அழுகிடும் என்று மறுப்புத் தெரிவிக்க, ஷகீலாவோ உங்கள் மகளுக்கு நெருக்கமானவர்தான் எனக்கு அதைச் சொன்னார்கள் என்று ஆதாரத்துடன் கூற வாயடைத்துப் போனார்.

மீண்டும் மாணவர்களை சந்திக்கத் தயாராகும் தளபதி விஜய்.. கடந்த ஆண்டைப் போலவே காத்திருக்கும் சர்பிரைஸ்!

அப்போது குயிலி குறுக்கிட்டு இப்போது தெரிகிறதா உங்கள் மகள் செய்யும் செயலை அம்பலப்படுத்தும் போது உங்களுக்கு எப்படி இருக்கிறது. அதைப்போலத்தானே மற்ற நடிகைகளைப் பெற்ற தாய்களுக்கும் இருக்கும் என பேசினார். இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மீண்டும் இன்னொரு பேட்டி ஒன்றில் குயிலி மற்றும் ஷகீலாவைப் பற்றி பேசும் போது அது, இது என்று ஒருமையில் குறிப்பிட்டார். மேலும் குயிலி நாயகன் படத்தில் நடித்த போது கவர்ச்சி நடிகைதான் என அப்போது அவரைப் பற்றி சில வார்த்தைகளைக் குறிப்பிட்டதாகவும், அதற்கு இப்போது பழிவாங்குகிறார் என்றும் குற்றம் சுமத்தினார்.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் குயிலி மற்றும் ஷகீலாவை அது இது என்று பேசுகிறீர்களே அது ஏன் என்று பேட்டி கண்டவர் கேட்க, அதற்கு அவர், “என்னை அவர்கள் தரக்குறைவாக நடத்தினார்கள். அதன் வெளிப்பாடுதான் இது” என்று கூறியிருக்கிறார். இவ்வாறு பேசலாமா என பேட்டி கண்டவர் கேட்க, அப்போ “அவ.. இவ..” என்று பேசவா என்று கேட்டு அதிர வைத்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். இத்தனை பட்டும் பயில்வானுக்கு இன்னும் புத்தி வரவில்லையே என கமெண்ட்டில் நெட்டிசன்கள் கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...