மீண்டும் மாணவர்களை சந்திக்கத் தயாராகும் தளபதி விஜய்.. கடந்த ஆண்டைப் போலவே காத்திருக்கும் சர்பிரைஸ்!

நடிகர் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் தி கோட் படத்தை முடித்துவிட்டு அதன்பின் கமிட் ஆகியுள்ள மற்றொரு படத்தில் நடித்த பின்னர் முழுநேர அரசியலில் இறங்கப் போவதாக கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளாவே விஜய் அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற செய்தி வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அச்சாரம் போடும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கடந்த ஆண்டு ஜுன் மாதம் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவிலும், மேலும் ஒவ்வொரு மாவட்ட அளவிலும், தொகுதி வாரியாகவும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 10, +2 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் நடிகர் விஜய்.

காலையிலிருந்து மாலை வரை கால்கடுக்க நின்று அவரே அத்தனை மாணவர்களுக்கும் தன் கரங்களால் பரிசுகளைக் கொடுத்து ஊக்கப்படுத்தியும், மேலும் அவர்களுக்கு சளைக்காமல் இன்முகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தும் அசத்தினார். விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் இல்லாமல் முற்றிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பூவே உனக்காக படத்துக்கு முன் அஜீத்துக்கு ஹிட் கொடுக்க நினைத்த இயக்குநர் விக்ரமன்.. நழுவிப் போன சூப்பர்ஹிட் படம்

நடிகர் விஜய் செய்த இந்த உதவி தமிழகமெங்கும் வைரலானது. மேலும் அரசியல் வர இது அடுத்தகட்ட பாய்ச்சல் என்றும் செய்திகள் உலா வந்தது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து செயலி மூலம் கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்த்தார். தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், எந்தக் கட்சிக்கும் தனது ஆதரவைக் கொடுக்காமல் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார்.

இந்நிலையில் கடந்த வருடம் மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தது போலவே இந்த ஆண்டும் அதேபோல் பரிசுகள் வழங்கும் விழாவினை நடத்தத் திட்டமிட்டுள்ளார் விஜய். அதன்படி அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருப்பதாவது, “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12, 10 ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துக்கள். விரைவில் நாம் சந்திப்போம்.” என்று பதிவிட்டுள்ளார். இதனால் கடந்த வருடம் போலவே மீண்டும் இந்த வருடத் தேர்வில் வெற்றி மாணவ, மாணவிகளைச் சந்திக்கப் போகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews