பூவே உனக்காக படத்துக்கு முன் அஜீத்துக்கு ஹிட் கொடுக்க நினைத்த இயக்குநர் விக்ரமன்.. நழுவிப் போன சூப்பர்ஹிட் படம்

மென்மையான காதல், குடும்பப் படங்களைக் கொடுத்து தியேட்டரில் ரசிகர்களை குடும்பம் குடும்பமாக அழைத்து வந்த பெருமை இயக்குநர் விக்ரமனுக்கு உண்டு. இயக்குநர் பார்த்திபனிடம் புதிய பாதை படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி பின்னர் புது வசந்தம் படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

இந்தப் படம் சூப்பர்ஹிட் ஆகவே, தொடர்ந்து நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம் போன்ற படங்களை இயக்கினார். விக்ரமன் படத்தில் அமைந்த அனைத்துப் பாடல்களும் மெலடியால் ரசிகர்களை ஈர்த்தது. மேலும் எப்போது கேட்டாலும் புத்துணர்ச்சி தரும் வகையில் அமைந்திருக்கும். திரைப்படங்களும் அவ்வாறே. அவர் படங்களில் வரும் வசனங்களுக்காகவே திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும்.

இந்நிலையில் இயக்குநர் விக்ரம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த படமான பூவே உனக்காக படத்தினை இயக்கினார். இப்படம் 1996-ல் வெளி வந்தது. ஆனால் அதற்கு முன்பே அவர் அஜீத்தை வைத்து இயக்கத் திட்டமிட்டிருந்தார். அந்தப் படம் தான் புதிய மன்னர்கள்.

1994-ல் விக்ரம், மோகினி நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த புதிய மன்னர்கள் படத்தில் முதன்முதலாக நடிக்கவிருந்தது அஜீத் தான். அப்போது தான் தனது கேரியரை ஆரம்பித்து நடித்துக் கொண்டிருந்த அஜீத்துக்கு இந்த வாய்ப்பு வந்த போது நடிக்க ஆர்வமாக இருந்தாராம்.

இது என்ன பிச்சைக்காரன் பாட்டு மாதிரி.. தயாரிப்பு நிறுவனம் தூக்கி எறிந்த பாட்டை சூப்பர் ஹிட் ஆக்கிய ஜேம்ஸ் வசந்தன்..

மேலும் அஜீத் அப்போது தீவிர பைக் ரேஸ் பிரியராக இருந்ததால் அந்த தருணத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவரால் புதிய மன்னர்கள் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அஜீத் அப்போது இயக்குநர் விக்ரமனிடம் நீங்கள் எப்போது கேட்டாலும் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.

வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரிதான் என்று கூறியிருக்கிறார். இதனிடையே விக்ரமன் பூவே உனக்காக, சூர்யவம்சம் வெற்றிக்குப் பின் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தினை இயக்கினார். அதில் அஜீத்துக்கு கெஸ்ட் ரோல் கொடுக்க அஜீத்தும் சூப்பராக நடித்துக் கொடுத்தார். இந்தப் படமும் மாபெரும் வெற்றிபெற்றது.

மேலும் விக்ரமனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜகுமாரன் நீ வருவாய் என படத்தின் வேலைகளில் ஈடுபட்டிருந்த போது பிளாஷ்பேக் காட்சிகளுக்கு அஜீத் நடித்தால் நன்றாக இருக்கும் என விரும்ப, உடனே விக்ரமன் அந்த தருணத்தில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜீத்தை விக்ரமனும், ராஜகுமாரனும் சந்தித்திருக்கின்றனர். நீ வருவாய் என படத்தின் கதையைக் கூட கேட்காமல் விக்ரமன் சொன்ன ஒரே காரணத்திற்காக அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார் அஜீத். இந்தப் படமும் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews