ஸ்டார் விமர்சனம்: கவினுக்கு அடுத்த பிளாக்பஸ்டர் ரெடி!.. நடிப்புல இன்னாம்மா மிரட்டுறாரு!..

Star Review: இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதை தாண்டி சினிமா துறையிலேயே இந்த படம் பெரிய பிளாக்பஸ்டர் அடிக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

ஸ்டார் விமர்சனம்:

டாடா படத்திலேயே தான் ஒரு நல்ல நடிகன் என்பதை ப்ரூப் பண்ண கவின் இந்த படத்தில் தான் ஒரு ஸ்டார் என்பதை தனது நடிப்பாலே வெளிப்படுத்தி மாஸ் காட்டியுள்ளார். படத்தின் தொடக்கத்தில் பள்ளிப்பருவ மாணவனாக மீசையில்லாமல் வருவது, அடுத்து கல்லூரியில் பெண்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட வெள்ளை மாதவனாக மாஸ் காட்டுவது, பெண்ணுரிமை வசனத்தை பேசி பாராட்டுக்களை மட்டுமின்றி காதலையும் அள்ளுவது என ஸ்கோர் செய்துள்ளார்.

ஸ்டார் படத்தின் கதை என்னவென்றால் ஸ்டில் போட்டோகிராஃபரான பாண்டியன் (லால்) நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டாலும் குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய சூழலில் தனது ஆசையை நிறைவேற்ற முடியாத சூழலில் தனது மகனையாவது ஹீரோ ஆக்கி அழகு பார்க்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால், அதற்கு தடையாக குடும்ப கஷ்டத்தை உணர்ந்து உருப்படுற வேலையை பாரு என சதா காலம் கரிச்சுக் கொட்டும் அம்மாவாக கீதா கைலாசம் ஸ்கோர் செய்கிறார்.

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டாலும் அதற்கு மாறாக இன்ஜினியரிங் படிப்பில் சேரும் ஹீரோ காலேஜையும் கட் அடித்து விட்டு ஆடிஷனுக்காக அழைந்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் மும்பைக்கு சென்று நடிப்பு பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என நினைக்கும் போது வீட்டில் காசு இல்லாத நிலையை உணர்கிறார். அம்மா தாலி செயினையே கழட்டி வீச சினிமா வேண்டாம் என முடிவெடுத்து கேம்பஸ் இண்டர்வியூக்கு செல்கிறார். ஆனால், அங்கேயும் அவர் சொதப்பி விடுகிறார்.

அதன் பின்னர் நடக்கும் ஒரு மேஜிக்கால் மும்பைக்கு செல்லும் கவின் நடிப்பு பயிற்சியை கற்று பெரிய ஹீரோவாகிடுவாரா? என எதிர்பார்க்கும் சூழலில் விபத்து ஏற்பட்டு அவரது முகத்தில் காயம் ஏற்பட்டு விடுகிறது.

பிகில் படத்தில் ஆசிட் வீச்சு பாதிப்புக்குள்ளாகும் பெண் போல வீட்டின் அறையிலேயே முடங்கி விடுகிறார். அவருக்கு மீண்டும் அவர் மீது நம்பிக்கை வர இன்னொரு காதலி வாழ்க்கையில் வருகிறார். ஆனாலும், சினிமாவில் தழும்புடன் இருக்கும் முகம் காரணமாக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. திருமணமும் முடியும் நிலையில், குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு செல்லும் ஹீரோ கடைசியாக ஹீரோவானாரா? அல்லது அவரது வாழ்க்கை என்ன ஆனது என்பது தான் இந்த ஸ்டார் படத்தின் கதை.

ஒவ்வொரு காட்சியிலும் அவர் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் சினிமாவுக்கு கொடுத்து நடித்திருக்கிறார். ஏற்கனவே அஜித் நடித்த முகவரி படத்தின் சாயல் இருந்தாலும், கவினின் நடிப்பு மற்றும் அந்த கிளைமேக்ஸ் காட்சி கண் கலங்க வைக்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் சர்ப்ரைஸ் பாடல், ஒரு பிரபலத்தின் என்ட்ரி மற்றும் செம ட்விஸ்ட் என ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் உள்ள இந்த படத்தில் குறை என்று பார்த்தால் ரொம்பவே பொறுமையாக நகர்வது தான்.

ஸ்டார் – சர்ப்ரைஸ்

ரேட்டிங் – 3.25

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...