அஜீத்துக்கு டஃப் கொடுப்பாரா சிம்பு? தக்லைஃபில் ஜெயம் ரவி வெளியேற இதுவா காரணம்..?

தக் லைஃப் படத்தில் சிம்புவின் கேரக்டர் பற்றிய சமீபத்திய சிங்கிள் வீடியோ அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் மிரட்டியது என்றே சொல்லலாம்.

ஜீப்பில் சர்ரென்று வந்து சரேல் என திரும்பி, கன்னை வைத்து மங்காத்தா அஜீத்துக்கு சவால் விடும் வகையில் மாஸ் கெட்டப்புடன் வருகிறார் சிம்பு. அவர் யாரை சுடுகிறார் என்று தெரிவதற்குள் வீடியோ முடிந்து விடுகிறது.

சிம்புவுக்கு 2 கே கிட்ஸ்கள் மத்தியில் ஒரு மாஸ் இருக்கு. அவருக்குப் படங்கள் வராத நிலையிலும் இந்த மாஸ் அவருக்கு இருந்து கொண்டே தான் உள்ளது. தக் லைஃபில் கமலின் மகனாக நடிக்கிறாராம் சிம்பு. விக்ரம் 2வைக் காட்டிலும் இந்தப் படம் பெரிய அளவில் பேசப்படும் என்கிறார்.

சாணக்கியா என்ற படம் முழுக்க முழுக்க மலையாளத்தில் எடுக்கப்பட்ட படம். அது தமிழில் டப் பண்ணியபோது ஓடவில்லை. ஆனால் மலையாளத்தில் சூப்பர்ஹிட். ரஜினியின் ஜெயிலர் படத்தில் மோகன்லால் நடித்தார். அது மலையாளத்திலும் ரீச்சாக வேண்டும் என்பதற்காக மலையாள ஹீரோக்களை நடிக்க வைத்தார்கள். ரஜினிக்கு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால், கமலுக்கு அது தேவையில்லை.

மலையாள ஹீரோ துல்கர் சல்மான் படத்தில் இருந்து சில காரணங்களால் விலகியதும் அந்த இடத்திற்கு சிம்பு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது மாநாடு படத்திற்குப் பிறகு சிம்பு நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜெயம் ரவி கூட படத்தில் இருந்து ஏதோ சில காரணங்களால் விலகி இருக்கிறார். அந்த இடத்தை அசோக் செல்வன் நிரப்புகிறார். சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

Thug life
Thug life

மலையாள ரசிகர்கள் துல்கர் சல்மானை வெளியேற்றியதால் ஏற்றுக்கொள்வார்களா என்று சந்தேகம் வரலாம். அங்குள்ள ரசிகர்களைப் பொருத்தவரை எந்த ஒரு ஹீரோவையும் தலையில் வைத்துக் கொண்டாட மாட்டார்கள். அவர்களுக்குக் கதை தான் முக்கியம். அதையெல்லாம் கடந்து போய்விடுவார்கள்.

ஜெயம் ரவிக்குக் கூட படத்தில் அவருக்குப் பிடித்த வகையில் கேரக்டர் இல்லாமல் இருக்கலாம். அல்லது உடன் நடிக்கும் சக நடிகர்களை விட முக்கியத்துவம் குறைந்ததாக இருக்கலாம். அல்லது அவர் நடிக்கும் காட்சிகள் குறைவாக இருக்கலாம்.

எது எப்படியோ உண்மையான காரணத்தை நாம் தெரியாமல சொல்ல முடியாது. இப்போது வரக்கூடிய படங்கள் எல்லாமே ஹாலிவுட்டுக்கு இணையானதாகத் தான் வருகிறது. மங்காத்தாவை விட விடாமுயற்சி வேற லெவல். அதே போல இந்தப் படத்திலும் அஜீத்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடித்துள்ளார். சிம்பு நடிப்பதால் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடிக்கும். கமலைப் பொருத்தவரை உடன் நடிக்கும் நடிகர்கள் அனைவருக்குமே அது சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் நல்ல ஸ்கோப் உள்ள வகையில் பார்த்துக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா தெரிவித்துள்ளார்.

சிம்பு வாழ்வில் பல வெற்றி தோல்விகளை சந்தித்து தற்போது ஒரு பக்குவப்பட்ட மனிதராக உள்ளார் என்பதால் படத்திற்குக் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவருக்கு இது ஒரு ரீ என்ட்ரி பிலிமாகத் தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...