கடந்த 2018ம் வருடம் அக்டோபர் இறுதியில் வெளியான திரைப்படம் ராட்சஷன். பல ரெக்கார்டு பிரேக்குகளை இப்படம் செய்தது. மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு சீட்டின் நுனிக்கே வர வைத்த த்ரில்லர் படம் இதுவென்றால் மிகையாகாது.
அந்த அளவு சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்களையும் இப்பட இயக்குனர் ராம்குமார் அன்லிமிடெட் ஆக அள்ளி வழங்கினார். தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில்தான் ராட்ஷசடு என்ற பெயரில் வெளியானது.
தமிழில் வெளியான ராட்சஷன் திரைத்துறையினர் பலரிடையேயும் ரசிகர்களிடையேயும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படம் சமீபத்தில் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த திரைப்பட விருதுகள் விழாவில் ராட்சசன் திரைப்படத்துக்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளன. அதன்படி சிறந்த படம், சிறந்த நடிகர் – விஷ்ணு விஷால், சிறந்த த்ரில்லர், சிறந்த இசைமைப்பாளர் – ஜிப்ரான் என நான்கு பிரிவுகளில் விருதை வென்றுள்ளது.