காமெடி நடிகர் சதீஷ் சினிமாவில் மட்டுமல்லாது நேரிலும் கடுமையாக கலாய்ப்பவர். சினிமா விழாக்களிலும் பயங்கரமாக நடிகர் நடிகைகளை கலாய்ப்பார்.
இந்நிலையில் நேற்று கூட ஆர்யா சாயிஷாவிடம் பூ கொடுக்கும் காட்சியை கலாய்த்து இருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்த போட்டியாளரான வனிதா விஜயகுமாரை கீழ்க்கண்டவாறு கடுமையாக கலாய்த்துள்ளார்.
நேற்றைய போட்டியில் வனிதா, தர்ஷன் வெளியேறியதற்கு ஷெரின் தான் காரணம் என கூற, அதனை தொடர்ந்து சில தீவிர வாக்குவாதங்கள் நடந்தது
இப்போது வனிதா பேசியதை கலாய்க்கும் வகையில் நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்’ நீ பண்ணது தப்புனு சொல்லல, ஆனா நீ பண்ணது தப்பு, உன்னால தர்ஷன் வெளியே போகல, ஆனா உன்னால தான் வெளியே போனாரு, எல்லாரும் அவுங்க opinion-அ சொல்லுங்க, ஆனா நான் யாரையும் பேசவிடமாட்டேன் என வனிதா வீட்டில் பேசியதை கூறி, என்ன நடக்குத்துனே புரியல என்ற ஸ்மைலியை பதிவிட்டுள்ளார்.