கயிலைமலைவாசன் – தேவாரப்பாடலும், விளக்கமும் -8

பாடல் வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்தஉயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை…

5795201dae8f4a1206d2465342fb27fd

பாடல்

வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

விளக்கம்..

கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை போன்ற தோள்களின் வலிமையை அழித்த எனது உள்ளம் கவர்கள்வன், துயர் விளங்கும் இவ்வுலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் அழியாது தன் பெயர் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன