10 ஓவர்கள், 48 ரன்கள் 3 விக்கெட்டுக்கள்: திணறும் இந்தியா!

By Bala Siva

Published:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது என்பதும் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 10 ஓவர்களில் வெறும் 48 ரன்களை மட்டுமே எடுத்து திணறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது

இந்திய அணியின் கேஎல் ராகுல், ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய 3 விக்கெட்டுகளும் சொற்ப ரன்களுக்கு இழக்கப்பட்ட நிலையில் தற்போது விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய அணியை 10 ஓவர்களில் வெறும் நாற்பத்தி எட்டு ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது என்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.நியூசிலாந்து அணியின் அபார பந்து வீச்சு காரணமாக இந்திய அணி ரன் எடுக்க திணறி வருவதை பார்க்கும் போது இந்திய அணி இன்றைய போட்டியில் தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சம் இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment