கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக கோவிலை அடைப்பதும் திறப்பதுவுமாக சூழ்நிலை இருந்து வந்தது. உலக அளவில் புகழ்பெற்ற இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவில் கூட அடைக்கப்பட்டது.
கொரோனா தொற்றால் பலர் உயிரிழந்த நிலையில் சாமியே இல்லை என்று பலர் இதை சாதகமாக பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வந்தனர்.
எப்படி இருந்தாலும் கோவில் , பூஜை, சாமி நம்மை மீறி ஒரு சக்தி இருக்கும் என்று நினைக்கும் மனிதர்கள் எத்தகைய கொடூரமான சூழ்நிலை, கொரோனா மரணங்கள் வந்த போதிலும் இறைவன் மீது நம்பிக்கை வைத்து இன்னும் உயிர்ப்புடன் இயங்குகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து வெறுமையில் இருந்தவர்கள், இறை நம்பிக்கை இல்லாமல் இருந்தவர்கள் கூட மன நிம்மதிக்காக அதிகம் கோவில் செல்ல துவங்கி விடுகிறார்கள்.
முன்பெல்லாம் வெள்ளி, சனி, ஞாயிறுகள் போன்ற விடுமுறை நாட்களில் மட்டும்தான் கூட்டம் வந்தது இப்போது எல்லா நாட்களிலும் எல்லா கோவில்களிலும் மக்கள் படையெடுக்க துவங்கி உள்ளனர்.
ஆன்மிக உணர்வு மக்களிடம் மிக தீவிரமாக அதிகரித்துள்ளது.