ஐப்பசி மாதம் வரும் விசேஷங்கள்

புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதம் ஆன்மிக மாதமாக கருதப்பட்டு அம்மாதங்களில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதில்லை. புரட்டாசி மாதம் திருமணம் போன்ற எந்த சுப நிகழ்வுகளும் நடப்பதில்லை.

தற்போது ஐப்பசி மாதம் வந்து விட்டது . ஐப்பசி மாதம் பெரும்பாலான திருமணங்கள் நடக்கும் . ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமியில் சிவனுக்கு சாதம் வடித்து அதை அலங்காரம் செய்யும் அன்னாபிசேகம் நடக்கும்.

ஐப்பசி மாதத்தில்தான் அதர்மம் அழிந்து நன்மை நடக்கும் தீபாவளி பண்டிகையும் வரும். அதர்மத்தை அழித்து அசுரனை முருகப்பெருமான் ஒழித்த கந்த சஷ்டி நாளும் இந்த மாதத்தில் தான் வரும்.

இந்த மாதம் சிவனுக்கும் முருகனுக்கும் உகந்த மாதமாகும்.

வடநாடுகளில் தீபாவளித் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல் நாளான திரயோதசி நாளன்று தனத்திரயோதசி மற்றும் எம தீபம் ஏற்றி வைத்து வழிபடுகின்றனர். தேய்பிறை திரயோதசி நாள் தனத்திரயோதசி என்றழைக்கப்படுகிறது. இந்தநாள் மஹாலட்சுமியின் திருவருளை முழுமையாக நம்மிடம் சேர்க்கும் நாள் ஆகும்.