ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடமும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ல் வருவதையொட்டி களை கட்ட துவங்கியுள்ளது.
புராணங்கள் ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று சிறப்பாக வரையறுக்கிறது. இந்த மாதத்தில் பகல் பொழுதும், இரவு பொழுது ஏற்றம் இறக்கம் இல்லாம சரி சமமா இருக்குமாம் அதனால் துலா மாதம் அதாவது தராசை துலாம் என்று சொல்வார்கள்.
அந்த பெயரில் துலா மாதம் என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியாக வலம் வரும் சூரிய பகவான் ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சஞ்சரிப்பது வழக்கமாம்.
இதனாலும் இதற்கு துலாம் மாதம் என்று பெயர் வந்ததாக கூறப்படுவதுண்டு.
இந்த மாதத்தில் காவிரி போன்ற புண்ணிய நதிகளிலும் நீராடுவது சிறப்பை தரும்.