குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான ஒரு ரெசிப்பியினை நாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இப்போது பேபி உருளைக் கிழங்கு தயிர் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
உருளைக்கிழங்கு – 2 கப்
தயிர் – 2 கப்
ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
லெமன் ஜூஸ் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
வெங்காயத்தாள் – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
செய்முறை:
1. உருளைக்கிழங்கை சிறிதாக வெட்டி, உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
2. அடுத்து பச்சை மிளகாய், வெங்காயத்தாள், கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், வெங்காயத்தாள், கொத்தமல்லி, உப்பு, தண்ணீர் சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் ஊற வைக்கவும்.
4. அடுத்து வெங்காயத்தாள், கொத்தமல்லி தழை தூவி இறக்கினால்
பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட் ரெடி.