உடல்நலம்

தலைமுடி உதிர்வுக்கு நோ..  பெஸ்ட் ரிசல்ட் கொடுக்கும் ஹேர்பேக்!!

20f8759b2a2c04fcccecd7b15ce9ab50

தலைமுடி உதிர்விற்கு இதுவரை பல வகையான ஹேர்பேக்குகளை நாம் ட்ரை செய்துவிட்டோம், இருப்பினும் எந்தப் பயனும் இல்லை என்று வருத்தத்தில் இருக்கிறீர்களா? உங்களுக்கான ஹேர்பேக் இதுதான். 

தேவையானவை:
நெல்லிக்காய்- 3
கறிவேப்பிலை – தேவையான அளவு
தேங்காய்ப் பால்- கால் கப்

செய்முறை:

1.    நெல்லிக்காயில் உள்ள கொட்டைகளை நீக்கி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து கறிவேப்பிலையினை சிறு துண்டுகளாக்கி மிக்சியில் நெல்லிக்காய், தேங்காய்ப் பால் சேர்த்து அரைக்கவும்.
3.    அடுத்து இதனுடன் நீர் சேர்த்து நன்கு வடிகட்டியில் வடிகட்டிக் கொள்ளவும்.

இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து அரை மணி நேரம் ஊறவிட்டு, கஞ்சி கலந்த சீயக்காய் கொண்டு முடியை அலச வேண்டும். இதனை வாரத்தில் தொடர்ந்து 2 முறை செய்து வந்தால் தலைமுடி உதிர்வு கட்டுக்குள் வரும்.

Avatar photo
Staff