ஒரே மாதிரி விலை, ஒரே IP முகவரியில் இருந்து டெண்டர் ஆவணங்கள், சந்தை விலையைவிட அதிக விலை.. லஞ்ச ஒழிப்புத்துறை செய்த புத்திசாலித்தனமான நடவடிக்கை

ஒரே மாதிரி விலை, ஒரே IP முகவரியில் இருந்து டெண்டர் ஆவணங்கள், சந்தை விலையைவிட அதிக விலை.. லஞ்ச ஒழிப்புத்துறை செய்த புத்திசாலித்தனமான நடவடிக்கை.. தப்பு செஞ்சவன் பத்தடி பாய்ந்தால், அதை பிடிப்பவன் 20…

DVAC

ஒரே மாதிரி விலை, ஒரே IP முகவரியில் இருந்து டெண்டர் ஆவணங்கள், சந்தை விலையைவிட அதிக விலை.. லஞ்ச ஒழிப்புத்துறை செய்த புத்திசாலித்தனமான நடவடிக்கை.. தப்பு செஞ்சவன் பத்தடி பாய்ந்தால், அதை பிடிப்பவன் 20 அடி பாய மாட்டானா? முதலில் ஆதாரங்கள், அதன்பின் நடவடிக்கைகள்.. அவசரப்படாமல் ஆழமான விசாரணை.. வலை விரிச்சாச்சு.. பெரிய மீன்களும் சிக்கும்.. சின்ன சின்ன மீன்களும் சிக்கும்.. எல்லோருக்கும் சேர்த்து ஒரே வலை தான்.. சிக்கினா அப்புறம் சிதறு தேங்காய்தான்…

முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்தே லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்முறை தமிழக அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இலகுரக மின்கடத்திகள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது. ஒரே மாதிரியான விலைப்புள்ளிகள் மற்றும் ஒரே ஐபி முகவரியில் இருந்து டெண்டர் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது போன்ற சந்தேகத்திற்கிடமான அம்சங்கள் இதில் ஆராயப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கின் மிக முக்கிய பகுதி என்னவென்றால், ஆரம்பக்கட்ட எஃப்.ஐ.ஆர்-ல் எந்தவொரு குறிப்பிட்ட அரசு அதிகாரியின் பெயரும் நேரடியாக சேர்க்கப்படவில்லை. மாறாக, “தெரியாத பொது ஊழியர்கள்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், குறிப்பிட்ட சில அதிகாரிகளை அல்லது முன்னாள் அமைச்சர்களை மட்டும் இலக்காக வைத்து விசாரணையை தொடங்குவதில் உள்ள சட்டப்பூர்வ சிக்கல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

விசாரணை ஆரம்பத்திலேயே பிரிவு 17(A) அனுமதிகள் அல்லது ஆளுநர் மற்றும் அரசு அனுமதி போன்ற நடைமுறைத் தடைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க இந்த வியூகம் பேருதவியாக இருக்கும். இதன் மூலம் முதலில் முறைகேடுகள் எங்கு, எப்படி நடந்தன என்பதற்கான தரவுகளையும் ஆதாரங்களையும் முழுமையாகத் திரட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழிவகுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் பல இடங்களில் நேற்று நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் பல்வேறு டெண்டர் ஆவணங்கள், மின்னணு தடயங்கள் மற்றும் போலி நிறுவனங்கள் குறித்த முக்கியத் தகவல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆதாரங்கள் முழுமையாக ஆராயப்படும்.

இந்த சோதனைகளின் முடிவில் அரசு அதிகாரிகள் அல்லது உயர் பதவியில் இருந்தவர்களின் நேரடிப் பங்கு உறுதியானால், அதற்கேற்ப சட்டப்பூர்வ அனுமதிகள் பெறப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது விசாரணையைத் திசைதிருப்ப முயலும் தடைகளைத் தாண்டிச் செல்ல உதவும் ஒரு திறமையான மற்றும் முறையான நகர்வாக பார்க்கப்படுகிறது.

சுருக்கமாகக் கூறின், ஆரம்பத்திலேயே சட்ட நடைமுறைச் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல், முறையான ஆதாரங்களை அடிப்படையாக வைத்து விசாரணையைத் தொடங்கும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த உத்தி, ஊழல் புகார்களை வெளிக்கொணர்வதில் ஒரு தெளிவான மற்றும் கச்சிதமான அணுகுமுறையாகக் கருதப்படுகின்றது.