தலவிருட்சம்னா என்னப்பா? இதுக்கும் கோவிலுக்கும் என்ன தொடர்பு?

தல விருட்சம் என்பது ஒரு கோயிலின் தல வரலாற்றோடும், அங்கிருக்கும் மூலவரோடும் தொடர்புடைய புனிதமான மரம். ஒவ்வொரு ஆலயத்திலும் மூர்த்தி (மூலவர்), தீர்த்தம் (குளம்/நதி), தலம் (தல விருட்சம்) என்ற மூன்று சிறப்புகளால் தான்…

தல விருட்சம் என்பது ஒரு கோயிலின் தல வரலாற்றோடும், அங்கிருக்கும் மூலவரோடும் தொடர்புடைய புனிதமான மரம். ஒவ்வொரு ஆலயத்திலும் மூர்த்தி (மூலவர்), தீர்த்தம் (குளம்/நதி), தலம் (தல விருட்சம்) என்ற மூன்று சிறப்புகளால் தான் அந்தக் கோயில் பெருமை பெறுகிறது. கோயில் கட்டப்படுவதற்கு முன்பே, இறைவன் அந்த மரத்தின் கீழ் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்ததாகவோ, அல்லது இறைவன் அந்த மரத்தின் வடிவில் அருள்பாலிப்பதாகவோ ஐதீகம் உண்டு. மூலவரை கருவறைக்குள் சென்று தரிசிக்க முடியாதவர்கள், தல விருட்சத்தைச் சுற்றி வந்து வணங்குவதன் மூலம், மூலவரைத் தரிசித்த முழுப் பலனும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

தல விருட்சங்களுக்கு மருத்துவக் குணங்கள் உள்ளன. அதை வணங்குவது ஆன்மீகப் பலனையும், ஆரோக்கியப் பலனையும் அளிப்பதாக நம்பப்படுகிறது.

வில்வம் மரமானது இந்து சமயத்தில், குறிப்பாக சிவ வழிபாட்டில், மிக உயர்ந்த புனித மரமாகக் கருதப்படுகிறது. இது சிவபெருமானுக்கு மட்டுமே உரிய தல விருட்சமாகப் போற்றப்படுகிறது. வில்வ மரமானது ஏன் சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமானது? வில்வ மரத்தின் இலைகள் பொதுவாக 3 இதழ்கள் கொண்டதாக இருக்கும்.

(சில இடங்களில் 5 அல்லது 7 இதழ்களும் காணப்படும்). இந்த 3 இதழ்களும் சிவபெருமானின் 3 கண்களை (சூரியன், சந்திரன், அக்னி) அல்லது அவரது 3 ஆயுதங்களான திரிசூலத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

மேலும், இவை மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களையும் குறிப்பதாக ஐதீகம் உண்டு.

வில்வ இலைகளை சிவலிங்கத்தின் மீது வைத்து அர்ச்சித்து வழிபடுவதன் மூலம், பக்தர்கள் தங்கள் பிறவிப் பாவங்கள் (கர்ம வினைகள்) நீங்கி, முக்தியை (மோட்சத்தை) அடைவார்கள் என்று நம்பப்படுகிறது. “ஓர் வில்வ அர்ச்சனை கோடிப் புண்ணியம்” என்று கூறுவதுண்டு. சிவபெருமா னுக்குப் பிடித்தமான இலை என்பதால், அதைச் சமர்ப்பிக்கும் பக்தர்களுக்கு அவர் விரைந்து அருள்பாலிக்கிறார்.

வில்வ மரத்தின் வேரில் மகா லட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே, வில்வ மரத்தை வணங்குவது செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை அளிக்கும். வில்வ மரத்தை வீட்டில் வளர்ப்பது மிகவும் சுபமாகக் கருதப்படுகிறது.

வில்வ பழம், இலை, வேர் என அனைத்துப் பகுதிகளும் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுகின்றன. இது வயிற்றுக் கோளாறுகள், சர்க்கரை நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படுகிறது.இதன் தலவிருட்சம் மகிழ மரம். இங்குள்ள வில்வ மரத்தின் அடியில்தான், சிவனடியாரான திருஞானசம்பந்தர் தேவாரம் பாடியதாக வரலாறு கூறுகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான சிவன் கோயில்களில், வில்வ மரமே தல விருட்சமாக அல்லது பிரதான வழிபாட்டு மரமாக இருக்கும். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், தலவிருட்சம் கடம்ப மரம். திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் தலவிருட்சம் நாவல் மரம். பல தலங்களில் வில்வ மரம் உண்டு.