உலகத்துலேயே திமுக வழக்கறிஞர் டீமுக்கு தான் சட்டம் தெரியுமாம்.. சட்டத்தை அவங்க மட்டும் தான் கரைச்சு குடிச்சிருக்காங்களாம்.. மத்திய அரசை எதிர்த்து ரெண்டு கேஸ்ல ஜெயிச்சிட்டா இவங்க மட்டும் தான் மேதாவி, மத்தவங்கள் எல்லாம் முட்டாளுன்னு ஒரு நினைப்பு.. கரூர் வழக்குல சுப்ரீம் கோர்ட் ஆப்பு வச்சுதா? இந்த திமிறு, தெனாவட்டு எல்லாம் அதிமுக கிட்ட வச்சிகிடனும், இல்லாட்டி மோடி, அமித்ஷா கிட்ட வச்சிகிடனும்.. எங்க விஜய் கிட்ட மோதினா சில்லு சில்லா சிதறிடுவிங்க.. தவெக ஐடி டீம் ஆவேசம்…

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டப் பிரிவு என்பது மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாகவும், இந்திய அளவில் அதற்கு நிகர் வேறெங்கும் இல்லை போன்றும் ஒரு மிகப்பெரிய பிம்பம் கடந்த சில…

supreme court

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டப் பிரிவு என்பது மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாகவும், இந்திய அளவில் அதற்கு நிகர் வேறெங்கும் இல்லை போன்றும் ஒரு மிகப்பெரிய பிம்பம் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டு ஊடகங்களாலும் சமூக வலைத்தளங்களாலும் மிகத்தீவிரமாக கட்டமைக்கப்பட்டு வந்தது. தங்களுக்கு தெரியாத சட்டமே இல்லை என்ற மமதையிலும், நீதிமன்றங்களை எப்போது வேண்டுமானாலும் தங்களின் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அதீத நம்பிக்கையிலும் வலம் வந்த அவர்களுக்கு, தற்போதைய உச்ச நீதிமன்ற நடவடிக்கைகள் ஒரு பேரிடியாக இறங்கியுள்ளன. கடந்த காலங்களில் ஆளுநருக்கு எதிரான சில வழக்குகளில் கிடைத்த வெற்றிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி போன்ற நாட்டின் முன்னணி மூத்த வழக்கறிஞர்களின் திறமையால் வந்ததே தவிர, அது திமுக சட்ட பிரிவின் தனிப்பட்ட சாதனை அல்ல என்ற கசப்பான யதார்த்தம் தற்பொழுது அம்பலமாகியுள்ளது.

தங்களின் இந்த தற்காலிகப் பிம்பத்தை வைத்துக்கொண்டு, தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுக்கு சட்ட ரீதியாக பெருத்த பின்னடைவை ஏற்படுத்திவிடலாம் என்று திமுக தரப்பு கணக்கு போட்டது. இதற்காக திமுகவின் ஆதரவு ஊடகங்களும், அவர்களின் வாடகை வாய்களாக செயல்படும் சில யூடியூப் சேனல்களும், தொங்கு சதைகளாக இருக்கும் பத்திரிகையாளர்களும் கடந்த சில நாட்களாக ‘விஜய்யின் கதை முடிந்தது, அவர் கரூருக்கு போக முடியாது, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயப்போகிறது’ என்று மிக தீவிரமாக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர். இன்றைய நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தவெக அரசு கதிகலங்கி நிற்கப் போகிறது என்று அவர்கள் கட்டமைத்த கற்பனைக் கோட்டைகள் அனைத்தும் தற்பொழுது உச்ச நீதிமன்றத்தின் ஒற்றை எச்சரிக்கையில் ‘புஸ்’ என்று காற்றில் கரைந்து போயுள்ளன.

இன்றைய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணையின் சாராம்சம் என்பது திமுகவுக்கு விழுந்த ஒரு மரண சவுக்கடியாகவே பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்பட்ட திமுக வழக்கறிஞர்களை நோக்கி, ‘உங்களுடைய அரசியல் சண்டைகளைத் தயவுசெய்து நீதிமன்றத்திற்குள் கொண்டு வராதீர்கள், அதை நீதிமன்றத்திற்கு வெளியேயே வச்சுக்கோங்கள்’ என்று நீதிபதிகள் மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளனர். ஒருவேளை நீதிமன்ற அவமதிப்பு என்று ஏதேனும் இருந்தால் அதற்குத் தனியாக வழக்குத் தொடர வேண்டுமே தவிர, அதை இங்கே அரசியல் காரணங்களுக்காகத் தங்களின் சுயலாபத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எங்கு செல்ல வேண்டும், எங்கு செல்லக்கூடாது என்று உத்தரவிட உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று திமுக தரப்பை நோக்கி நீதிமன்றம் மிகத் தெளிவான கேள்விகளை எழுப்பியுள்ளது. கரூருக்கு முதலமைச்சர் போகக்கூடாது என்றும், ஏற்கனவே போடப்பட்ட பணி நியமன உத்தரவுகளை அவர் வழங்கக் கூடாது என்றும் தடுப்பதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் சாடியுள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முதலமைச்சரின் பெயரே எஃப்.ஐ.ஆரில் இல்லாத போது, ஒரு பிரதான மக்கள் தலைவரின் பயணங்களை முடக்கக் கோருவது சட்டத்திற்குப் புறம்பானது என்பதை நீதிமன்றம் தங்களின் கேள்விகள் மூலம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

நீதிமன்றம் இந்த மனுவை எந்தவிதக் காருண்யமும் இன்றி தள்ளுபடி செய்யப் போகிறது என்பதை இறுதி நிமிடத்தில் உணர்ந்துகொண்ட திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர்கள், மேலும் அவமானம் அடைவதைத் தவிர்க்கத் தங்களின் மனுவை வேறு வழியின்றித் அவசர அவசரமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். பொதுவாக நீதிமன்றங்களில் பெரிய வழக்கறிஞர்கள் வந்து நிற்கும்போது, அவர்களை நேரடியாகத் தள்ளுபடி செய்து அசிங்கப்படுத்தாமல், மனுவைத் திரும்பப் பெறுகிறீர்களா அல்லது தள்ளுபடி செய்யவா என்று நீதிபதிகள் கேட்கும் வழக்கமான நடைமுறையைப் பயன்படுத்தி திமுக தப்பித்துள்ளது. ஆனால், நீதிமன்றத்திற்கு வெளியே வந்த திமுக வழக்கறிஞர் வில்சன், நாங்களே ஏதோ பெருந்தன்மையோடு மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகப் பேட்டி அளிப்பது சட்டம் தெரிந்த அனைவராலும் எள்ளி நகையாடப்படுகிறது.

ஒட்டுமொத்தத்தில், இந்த விவகாரத்தில் திமுக இன்று உச்சகட்ட அவமானத்தில் முகம் குப்புற விழுந்து நொருங்கி நிற்கிறது என்பதுதான் தற்போதைய நிதர்சனமான உண்மையாகும். தங்களின் இந்த அசிங்கமான தோல்வியையும், பின்னடைவையும் மறைப்பதற்காகத் தங்களின் வாடகை வாய்களை வச்சுக்கொண்டு, இது ஒன்னும் பின்னடைவு கிடையாது என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர நீதிமன்றமே சொன்னதாகப் புதிய கதைகளைக் கட்டித் தம்பட்டம் அடித்து வருகின்றனர். ஆன்லைனில் சில நிமிடப் புகழுக்காகவும், கைதட்டல்களுக்காகவும், தவெகவின் அசுர வேக வளர்ச்சியைத் தடுக்க நினைத்த திமுகவின் இத்தகைய பிடிவாதமான மற்றும் முதிர்ச்சியற்ற அரசியல் நகர்வுகள், அந்த இயக்கத்தின் எஞ்சியிருக்கும் நற்பெயரையும் மக்கள் மத்தியில் முற்றிலுமாகச் சிதைத்துவிட்டது என்றே அரசியல் விமர்சகர்கள் திட்டவட்டமாகக் கருதுகின்றனர்.