அடக் கடவுளே..! சங்கர் கணேஷ் இசை அமைத்த முதல் படத்துக்கே இவ்ளோ சோதனையா?

தமிழ்சினிமா உலகின் முக்கிய இசை அமைப்பாளர்களில் ஒருவர் சங்கர் கணேஷ். இவர் இசையில் பல சூப்பர்ஹிட் படங்களும், பாடல்களும் உள்ளன. அந்த வகையில் அவர் இசையில் உருவான முதல் தமிழ்ப்படம் என்னவாக இருக்கும் என்ற…

தமிழ்சினிமா உலகின் முக்கிய இசை அமைப்பாளர்களில் ஒருவர் சங்கர் கணேஷ். இவர் இசையில் பல சூப்பர்ஹிட் படங்களும், பாடல்களும் உள்ளன. அந்த வகையில் அவர் இசையில் உருவான முதல் தமிழ்ப்படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவருக்குமே எழுவதுண்டு. வாங்க அதற்கான விடையைப் பார்க்கலாம்.

தமிழ்ல இசை அமைத்த முதல் படம் எது என ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் தான் டாப். வாங்க பார்க்கலாம்.

இசை அமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் இசை அமைத்த முதல் படம்னா அது நகரத்தில் திருடர்கள் என்ற படம். அதன் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைகின்ற நிலையில் அந்தப் படத்தின் பங்குதாரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அந்தப் படம் வெளிவரல. தான் அறிமுகப்படுத்திய இசை அமைப்பாளர்களான சங்கர் கணேஷூக்கு சரியான வாய்ப்பு அமையாமல் போய்விட்டதேன்னு ஆதங்கம் கண்ணதாசனுக்கு இருந்தது.

அதனால் தான் தேவர் பிலிம்ஸ் சின்னப்பா தேவர்கிட்ட சங்கர் கணேஷை அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து தான் மகாராசி படத்துக்கு இசை அமைக்கக்கூடிய வாய்ப்பு சங்கர் கணேஷூக்குக் கிடைத்தது.