முதல்வன் பட வசனம் தான் ஞாபகம் வருது.. எவ்ரிபடி.. ஒரு முன்னாள் அமைச்சர் விடாம எல்லோரும் ஊழல் செஞ்சிருக்காங்க.. இப்ப லேட்டஸ்ட்டா சிவசங்கருக்கு பறந்துருக்கு சம்மன்.. அவரோட உதவியாளர்ன்னு சொல்லி ஒருத்தர் லட்சக்கணக்குல மோசடி செஞ்சிருக்கார்.. உதவியாளர்ன்னு மட்டும் உறுதியாச்சு, சிவசங்கர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது…

தமிழக அரசியல் வட்டாரத்திலும், பொது போக்குவரத்துத் துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் முன்னாள் போக்குவரத்துத் துறை…

ss sivasankar

தமிழக அரசியல் வட்டாரத்திலும், பொது போக்குவரத்துத் துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரனுக்குச் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வேலைவாய்ப்பு மோசடி விசாரணைப் பிரிவினர் இந்த அதிரடிச் சம்மனை அவரது இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கியுள்ளனர். இந்த சம்மனின்படி, ஜூலை 1-ஆம் தேதி அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது, தற்போதைய அரசியல் சூழலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த அதிரடிச் சம்மன் நடவடிக்கைக்கு முன்னதாக, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 60 வயதான எல். இளஞ்செழியன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு சிறப்புப் போலீசார் கைது செய்தனர். சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரான எஸ். சீனிவாசன் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த பரபரப்புப் புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை அரங்கேறியுள்ளது. ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கொடுத்த புகாரை அடுத்து, தீவிரக் கள விசாரணையில் இறங்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசார், இந்த மோசடிக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பின்னணிகளைக் கண்டறிந்து இந்த முக்கியக் கைதை மேற்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சீனிவாசன் அளித்த புகாரின் விவரங்களின்படி, கைது செய்யப்பட்டுள்ள இளஞ்செழியன் தனக்கு அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரனுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறி நம்ப வைத்துள்ளார். அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, சீனிவாசனின் மகனுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உதவி பொறியாளர் பணியை எளிதாக வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். இதனை நம்பிய சீனிவாசன், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல தவணைகளாக மொத்தம் 23 லட்சம் ரூபாய் பணத்தை இளஞ்செழியனிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் வேலை கிடைக்காததோடு, வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல் இளஞ்செழியன் ஏமாற்றி வந்ததாகப் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சீனிவாசனின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், இளஞ்செழியனைக் கைது செய்தபோது அவரிடமிருந்து இரண்டு போலி அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த அடையாள அட்டைகள் அவர் அமைச்சரின் உதவியாளர் என்ற தோரணையை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள இளஞ்செழியனின் சொந்த வீட்டிற்குச் சென்ற போலீசார், அங்கு அதிரடியாகச் சோதனை நடத்தி விட்டு அந்த வீட்டிற்கு அதிகாரப்பூர்வமாகச் சீல் வைத்துள்ளனர்.

தற்போது கைதாகியுள்ள இளஞ்செழியனின் பின்னணியில் உள்ள முழுமையான நெட்வொர்க்கைக் கண்டறியவும், இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பதை வெளிக்கொண்டு வரவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, எழும்பூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு மோசடி விசாரணைப் பிரிவு சார்பில் ஒரு முக்கிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கைதான இளஞ்செழியனைத் தங்களின் காவலில் எடுத்து விடிய விடிய விசாரிக்க ஏதுவாக 7 நாட்கள் போலீஸ் காவல் கோரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன், அவரிடம் நடத்தப்படும் தீவிர விசாரணையில் மேலும் பல உண்மைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் இந்த மோசடி விவகாரத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் சமூக வலைதளப் பக்கத்தில் உடனடியாகத் தனது விளக்கத்தை அளித்துள்ளார். கைதாகியுள்ள இளஞ்செழியன் என்பவர் தனது தனிப்பட்ட உதவியாளராக ஒருபோதும் பணியாற்றவில்லை என்றும், அவரது செயல்பாடுகளுக்கும் தனக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு, ஜூலை 1 அன்று விசாரணை நடத்தப்படவுள்ள இந்த வேலைவாய்ப்பு மோசடி வழக்கு, தமிழக அரசியல் மற்றும் அரசுத் துறை வட்டாரங்களில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.