சிவாஜி படத்தின் மூலக்கதையில் கலைவாணர்… அந்தப் படத்துக்கு அப்படி ஒரு ஸ்பெஷலா?

தமிழ்த்திரை உலகின் பிதாமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதே போல கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் என்எஸ்.கிருஷ்ணன். இந்த இருவருக்கும் ஒரு படத்தின் வாயிலாக அருமையான தொடர்பு உண்டு. அது என்னன்னு பிரபல…

தமிழ்த்திரை உலகின் பிதாமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதே போல கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் என்எஸ்.கிருஷ்ணன். இந்த இருவருக்கும் ஒரு படத்தின் வாயிலாக அருமையான தொடர்பு உண்டு. அது என்னன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொல்லக் கேட்போமா…

1955ல் சிவாஜி, பத்மினி இணைந்து நடித்த மங்கையர் திலகம் என்ற ஒரு படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன் மூலக்கதை ஒரு மராட்டிய கதை. அது இந்தியாவில் பல மொழிகளில் படமாக்கப்பட்டன. கன்னடத்தில் ஸ்ரீரத்னா என்ற பெயரில் படமான அந்தக் கதையை இயக்கியவர் பிரபல இயக்குனர் கே.சுப்பிரமணியம். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாயாரான சந்தியா, அவரது சித்தி வித்யாவதி என இருவரும் அந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பல திரைப்படங்களில் நடித்து வெற்றியைக் குவித்த கலைவாணர், மதுரம் ஜோடி இணைந்து கன்னடத்தில் அறிமுகமான படம் ஸ்ரீரத்னா தான். தமிழில் பல படங்களில் நடித்து வெற்றியைக் குவித்த இந்த ஜோடியை அறிமுகம் செய்தவர் கே.சுப்பிரமணியம். ஸ்ரீரத்னா என்ற பெயரில் உருவான அந்த ஒரே ஒரு படம் தான் கன்னடத்தில் என்எஸ்.கிருஷ்ணன் நடித்த ஒரே ஒரு திரைப்படம்.